பக்கம்:சேதுபதி மன்னரும் இராஜநர்த்தகியும்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னரும் ராஜநர்த்தகியும் 87 மன்னர் அந்த நாற்காலி முன் இருந்த இருக்கையில் அமர்ந்து சாப்பிடத் தொடங்கினார். "குமாரத் தேவா இது என்ன அக்கார அடிசில்தானே? கல்கண்டு சோறு போல மிகவும் தித்திப்புடன் இருக்கிறதே" "ஆமாம் மகாராஜா மடைப் பள்ளியில் சற்றுமுன்னர் அதனைச் சோதித்து சிறிது சாப்பிட்டுப் பார்த்தேன். வழக்கத்திற்கு மாற்றமாக கோயில் பரிசாரகர் சர்க்கரைக்குப் பதிலாக, இதனை சாயல்குடிக் கருப்புக் கட்டி பாகில் செய்திருக்கிறார். அதனால் மிகவும் தித்திப்பாக இருக்கிறது....." "கறுப்புக்கட்டிப் பாகு இவ்வளவு இனிமை தரும் என்பதை இன்றுதான் அறிகிறேன்." "சமுகத்திற்கு. . . . நமது கிழக்கரையை அடுத்த மாயாகுளம் பதனிரில் இருந்து காய்ச்சி பதப்படுத்தப்படும் பாகு வெல்லப் பாகைவிட இனிப்பாக இருக்கும்." "அடடே...." என்று வியப்பைத் தெரிவித்த மன்னர் இலையில் வைக்கப்பட்டிருந்த மற்ற பலகாரங்களையும் ருசித்துச் சாப்பிட்டுவிட்டு, "எல்லாம் நன்றாகத்தான் தயாரிக்கப்பட்டு இருக்கிறது." என்று சொல்லியவாறு இருக்கையில் இருந்து எழுந்து எதிர்புற அறைக்கு சென்று கையலம்பி வந்தார். விடுதியின் நடுக் கூடத்திற்கு வந்த மன்னர், திண்டு மெத்தையில் அமர்ந்தவுடன் திண்ணையில் பிரதானி நின்று கொண்டிருப்பதைக் கவனித்தவுடன் பிரதானி அங்கு வந்தார். "நேரமாகிறது இன்னும் சாப்பிடச் செல்லவில்லையா? ஏதும் தகவல்கள் இருக்கின்றனவா?" பிரதானியை பார்த்து மன்னர் கேட்டார்.