பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1O-1 சேதுபதி மன்னர் (2: 20 | ராங்கியம் மறவணி ஏந்தல் கல்வெட்டு இந்தக் கல்வெட்டு புதுக்கோட்டை மாவட்டம் திருமெய்யம் வட்டம் ராங்கியம் ஊரின் குளக்கரையில் நாட்டப்பட்டுள்ள கல் ஒன்றில் கீழ்க்கண்ட பாடலாகக் காணப்படுகிறது. இதிலிருந்து ராங்கியம் கிராமத்தை அடுத்துள்ள மறவனி ஏந்தல் என்ற சிறு கண்மாயையும் அதன் விவசாய நிலங்களையும், திருமலை ரகுநாத சேதுபதி மன்னர் தில்லை நடராஜப் பெருமாளுக்கு தானமாக வழங்கிக் கல்போட்டுக் கொடுத்துள்ளார் (1645-1675) என்ற விவரம் தெரியவருகிறது. r = – + - * * i - திருமலை ரகுநாத சேதுபதியின் பெயரும் இந்தக் கல்வெட்டில் காணப்படவில்லை என்றாலும் "தென்னன் விஜயன் ரகுநாதன்" என்ற சொல் தொடரிலிருந்தும் திருமலை ரகுநாத சேதுபதி ஏற்கனவே வழங்கியுள்ள பல செப்பேட்டு வாசகங்களிலிருந்தும் இந்தச் சொற்றொடர்