பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105 சேதுபதி மன்னர் l இயல் 21 | திருக்கோட்டியூர் திருக்கோயில் கல்வெட்டு சேது நாட்டை மிகச் சிறப்பான முறையில் ஆட்சி செய்து நாட்டின் பரப்பையும், புகழையும் அதிகரிக்கச் செய்த திருமலை ரெகுநாத சேதுபதி கி.பி.1673-ல் காலமானார். இவரது ஒரே மகனான ராஜசூர்யத்தேவர் சேது மன்னராக முடிதரித்துக் கொண்ட பொழுதிலும், அவரது ஆட்சி ஓராண்டு காலம் கூட நிறைவு பெறாமல் அவரது அகாலமரணத்தில் முடிவு பெற்றது. இதனால் இவரது சிறிய தந்தையான ரெகுநாத அதானத் தேவர் அடுத்து சேதுபதி மன்னராக தேர்வு செய்யப்பட்ட பொழுதும் அவரும் அகால மரணமுற்றார். இதனைத் தொடர்ந்து சேதுநாட்டின் மன்னர் யார் என்ற வினாவிற்கு உரிய விளக்கம் அளிக்க இயலாத குழப்பமான சூழ்நிலை தொடர்ந்தது. ஒரு வகையாக இராமநாதபுரம் அரண்மனையின் அரசியல்