பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107 கல்வெட்டுக்கள்= முதியவர்கள் திருமலை ரெகுநாத சேதுபதியின் உறவுக்காரரான ரெகுநாத தேவர் என்ற கிழவனைச் சேதுநாட்டின் மன்னராக கி.பி.1678ல் நியமனம் செய்தனர் என்றாலும், இவரது நியமனத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட பாளையக்காரர்களது குழப்பங்களை உறுதியுடன் சமாளித்த ரெகுநாத கிழவன் சேதுபதியின் ஆட்சி இயல்பான சமயப்பொறைக்கும் ஆன்மீக வளர்ச்சிக்கும் எடுத்துக்காட்டாக விளங்கியது. இந்த மன்னரது ஆட்சியில் சேதுநாட்டின் சிறுபான்மை இனத்தவரான இஸ்லாமியரும், வைணவர்களும், சமணர்களும், சேது மன்னரது ஊக்குவிப்புக்களுக்கு உரியவராக விளங்கினார். திருவாடானை வட்டம் சுந்தரபாண்டியன் பட்டினம் அருகே உள்ள சமணப் பள்ளிக்கு இந்த மன்னர் வழங்கிய பள்ளிச்சந்தம் என்ற அறக்கொடை பற்றிய செப்பேட்டுச் செய்தி உள்ளது. இதனைப் போன்றே இராமநாதபுரம் வட்டத்தில் நாரணமங்கலத்திலும், திருச்சுழி வட்டம் காரேந்தலிலும், கமுதி வட்டம் பொந்தாம்புளியிலும், முஸ்லிம் தொழுகைப் பள்ளிகள் இந்த மன்னரது நன்கொடை பெற்ற விவரங்களை நிலமான்யப் பதிவு கணக்கு தெரிவிக்கின்றது. வைணவர்களுக்கும், இந்த மன்னர் ஆதரவாக விளங்கினார் என்பதை அதே நிலமான்யப் பதிவு கணக்கு மூலம் தெரியவருகிறது. சேதுநாட்டின் வடபகுதியில் சிவகெங்கைக்கும், திருப்பத்துாருக்கும் இடையில் அமைந்திருப்பது திருக்கோட்டியூர் என்ற தலமாகும். இங்கு மும்மூர்த்திகளான மகாவிஷ்ணு. சிவபெருமாள், பிரம்மா ஆகிய மூவரும் கூடி உலக நலன் பற்றி ஆலோசித்தனர் என்பது தலவரலாறு. இங்கு எழுந்தருளியுள்ள செளமிய நாராயணப்பெருமாள் மீது دمنا ஆழ்வார்கள் மங்களாசாசனம் என்ற துதிப்பாடல்களை இயற்றி வழிபட்டுள்ளனர். இங்கிருந்த திருக்கோட்டியூர் நம்பி என்ற ஆச்சாரியரிடம் வைணவப் பெருந்தகையான ரீ ராமானுஜர் உபதேசம் பெற்றார்