பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வெட்டுக்கள் 111 l இயல் 22 | காட்டு பாவா சாகிப் பள்ளிவாசல் கல்வெட்டு காட்டு பாவா சாகிபு பள்ளிவாசல் திருப்பத்துார். திருமெய்யம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. அங்கு அடக்கம் பெற்றுள்ள புனித இறைநேசர் பாவா பக்குதின் என்பவரது அடக்கத்தைவிடத்தைக் குறிப்பதாகும். தமிழகத்தில் முஸ்லிம்கள் ஐந்துவேளை தொழுகை நடத்தும் இடம் மட்டும்தான் பள்ளிவாசல் என அழைக்கப்படுவதுண்டு. அதுபோலவே மனித புனிதர்களது அடக்கவிடங்கள் தர்ஹா என்ற பெயரில் மட்டும்தான் அழைக்கப்படும். இதற்கு மாற்றமாக தர்ஹாவிற்கு பதில் பள்ளிவாசல் எனக் குறிப்பிடப்பட்டு இருப்பது உலக வழக்காகும். கி.பி.1516ஆம் நூற்றாண்டுகளில் வடக்கே இருந்து தெற்கே வந்து சோழ மண்டலத்தில் இறை உணர்வையும், ஒருமைப்பாட்டு உணர்வையும், போதித்து வந்த இறை நேசர் நாகூர் ஆண்டகை எனப்படும் சாகுல் ஹமீது (வலி) (கி.பி.1404-1576)