பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

113 கல்வெட்டுக்கள் - - உத்தாரநாட்டு கல் வாசல் நாட்டு நல்லூர் புரவில் அமைந்த அடுக்குளமும், வயல்களும் மற்றும் காஞ்சவன்குளமும், அதனைச் சூழ்ந்த வயல்களும் இந்த அறக்கொடையில் சேர்க்கப்பட்டு இருப்பதாகத் தெரியவருகிறது. இந்த நிலப்பரப்பு ஏற்கனவே சேர்வைக்காரர் ஒருவருக்கு சீவிதமாக வழங்கப்பட்டிருந்தது என்ற செய்தியும் இந்தக் கல்வெட்டின் வழி அறியப்படுகிறது. தர்ஹா அமைந்த காட்டுப் பகுதியும், கானுர் என்று குறிக்கப்படுகிறது. உலக வழக்ககில் காட்டுப் பாவா பள்ளிவாசல் என்பது தான் பிரசித்தமாக உள்ளது. இந்த கல்வெட்டின் காலம் கி.பி.1696 எனக் கணிக்கப்படுகிறது. இந்தக் கல்வெட்டை வெட்டுவிக்கச் செய்தவர் கிழவன் ரெகுநாத சேதுபதியின் ஒரே மகனான ரனசிங்கத் தேவர் ஆவார். இவர் திருப்புத்துர் நாடு, சூரக்குடிநாடு, புறமலை நாடு, கழனிவாசல்நாடு, அதளையூர் நாடு, கல்வாசல் நாடு, பூங்குன்ற நாடு ஆகிய பகுதிகளின் ஆளுநராக இருந்திருக்க வேண்டும் எனத் தெரிகிறது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் இன்றைய திருப்புத்துரில் இருந்து மேற்கே 1 கல்தொலைவில் அமைந்த மதுரை நெடுஞ்சாலையில் உள்ள ரணசிங்கபுரம் என்ற சிற்றுர் இருப்பது இந்த ரணசிங்கத் தேவரை நினைவுபடுத்துவதாக உள்ளது. இவர் கி.பி.1702ல் மதுரை இராணிமங்கமாளினது படைகளை எதிர்த்து இராமநாதபுரம் கோட்டைக்கு மேற்கே நடந்த போரில் வீர மரணம் எய்தினார் என்றும் தெரியவருகிறது. இந்தப்பள்ளிவாசலுக்கு புதுக்கோட்டை மன்னர் ரெகுநாத ராய தொண்டமான் இரண்டு ஊர்களை தானமாக வழங்கினார் என காட்டு பாபா சாகிபு அம்ம்ானை தெரிவிக்கின்றது. இந்தக் கல்வெட்டின் வாசகம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.*