பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 =சேதுபதி மன்னர் செம்பி நாட்டு மறவர் பிரிவைச் சேர்ந்தவரும் அல்லாத பெண்மணியின் மூலம் பிறந்தவர் என்ற காரணத்தினால். ஆதலால் இவருக்குப்பதிலாக இறந்து போன கிழவன் ரகுநாத சேதுபதியின் தங்கையின் மகன் திருவுடையாத் தேவரை இராமநாதபுரம் அரண்மனை முதியவர்கள் தேர்வு செய்து சேதுபதி மன்னர் பட்டம் சூட்டினர். இதனால் மனம் தளர்ந்த பவானி சங்கரத் தேவர் தமது மாமன் முறையினரான கள்ளர் சீமைத் தலைவர் ரகுநாத ராயத் தொண்டமானையும், தஞ்சை மராத்திய மன்னர் முதலாவது ஷாஜியையும் அணுகி அவர் இராமநாதபுரம் சீமை மன்னராவதற்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார். பவானி சங்கரத் தேவருக்கு ஒரு நிபந்தனையின் பேரில் ராணுவ உதவி புரிய தஞ்சை மன்னர் முன்வந்தார். அதாவது திருமலை ரகுநாத சேதுபதி மன்னரது காலத்தில் கைப்பற்றப்பட்டு இராமநாதபுரம் சீமையில் சேர்க்கப்பட்ட அறந்தாங்கி பட்டுக்கோட்டை திருவாரூர் சீமைகளைத் தஞ்சைக்குத் திருப்பி அளிக்க வேண்டும் என்பது அந்த நிபந்தனை. இந்த நிபந்தனையை ஒப்புக்கொண்டு தஞ்சைமராட்டியப் படைகளின் உதவியுடன் கி.பி.1726ல் இராமநாதபுரம் கோட்டையைப் பிடித்த பவானி சங்கரத் தேவர் சேதுபதி மன்னரானார். ஆனால் இவரது ஆட்சி இரண்டாண்டுகளுக்கு மேல் நடைபெறாமல் முடிந்துவிட்டது. இவரது ஆட்சிக் காலத்தில் இந்த மன்னர் பல ஊர்களைப் பல கோயில்களுக்குச் சர்வ மான்யமாக வழங்கி உதவியுள்ளார். அவைகளில் நயினார்கோவில் நாகநாத சுவாமி ஆலயத்திற்கு அவர் வழங்கிய தானம் பற்றிய கல்வெட்டு ஒன்று மட்டும் கிடைத்துள்ளது. இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களது நிர்வாகத்திற்கு உட்பட்ட அறுபத்து இரண்டு கோயில்களில் நயினார் கோவிலும் ஒன்று. இங்கு இறைவர் நாகநாதர் என்ற பெயருடன் வழங்கப்பட்டு வருகிறார். இந்தப் பகுதியில் உள்ள மக்களால் பெரிதும் பக்தியுடன்