பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12P, - சேதுபதி மன்னர் வரைந்து கொடுத்துள்ளனர்.' இந்தக் கல்வெட்டு வாசகத்திலிருந்து கீழ்காணும் செய்திகள் தெரியவருகின்றன. அ) சேதுபதிமன்னர் தானமாக வழங்கிய கலையனூர் பெருவயல் என்ற இந்தக் கிராமத்தின் மொத்தப்பரப்பு 206 கலவிரையடி என்றும் இதில் கோயில் அர்ச்சகர், முத்திரைக்கணக்கு, கோயில் கணக்கு ஆகிய பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களது பாகமும் (அர்ச்சனா பாகம்) இந்த மான்யத்தில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆ) இந்தக் கோயிலின் வழிபாட்டுச் செலவிற்காக இராமநாதபுரம் பேட்டை வணிகர்கள் ஏற்படுத்திய மகமையிலிருந்து அப்பொழுது சேதுநாட்டில் இலங்கை போன்ற கீழ்த்திசை நாடுகளிலிருந்து பாக்கும் செம்பும் இறக்குமதி செய்யப்பட்டது என்றும் இராமநாதபுரம் பகுதியில் பருத்தியும், வெற்றிலையும் மிகுதியாக விளைச்சல் செய்யப்பட்டது என்றும் தெரிந்து கொள்ள முடிகிறது. இ) இந்தக் கல்வெட்டினைப் பொறித்த சேதுபதி மன்னரது ஆட்சிக்காலத்தில் முருகனது வழிபாடு சேதுநாட்டில் மிகுந்த பிரபலம் பெற்று வந்தது என்பதை இந்தத் தான சாசனம் தெரிவிப்பதுடன் இதே சேதுபதி மன்னர் பழனி மலை தண்டாயுதபாணி கோயிலுக்கும், சேதுநாட்டின் தெற்கே உள்ள பகுதியில் உள்ள குளவயல் கிராமத்து சுப்ரமணிய சுவாமி கோயிலுக்கும் நிலக்கொடைகள் தானம் வழங்கியிருப்பது தெரியவருகிறது. இந்தக் கல்வெட்டு வாசகம் பின்வருமாறு: 1._சபழநி மகா மண்டலேசுபரன் அரிய ராயதளவி 2. பாடன் பாஷைக்குத் தப்புவறாய கண்டன், கண்டதாடு கொண்டு 3. கொண்டநாடு கொடாதான், பாண்டி மண்டலச் 1. கமால் எஸ்.எம்.டாக்டர் - ஆவணம் இதழ் எண் - 11