பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 சேதுபதி மன்னர் இருபக்கங்களிலும் பொறிக்கப்பட்ட கல்வெட்டாகும் இது. முந்தைய பெருவயல் கல்வெட்டினைப் போன்று இந்தக் கல்வெட்டு மிக நீண்டதாகவும், நடுகல்லின் முதற்பக்கத்தில் 36 வரிகளும் இரண்டாவது பக்கத்தில் 23 வரிகளும் காணப்படுகின்றன. ஏற்கனவே குறிப்பிட்டபடி கல்வெட்டுககளை பொறிப்பதில் அனுபவமுள்ள கல்தச்சர்கள் இந்த மன்னரது காலத்தில் சேதுநாட்டில் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்தக் கல்வெட்டின் தொடக்கத்தில் விஜய நகர மன்னர்களின் பெயர்களை சம்பநதமில்லாமல் குறிப்பிட்டுவிட்டு இராமநாதபுரம் குமார முத்து விஜய ரகுநாத சேதுபதி மன்னரது தானம் பற்றிப் பொறிக்கப்பட்டுள்ளது. சேது மூலத்தில் சோம வார அன்னதானத்திற்கு சேதுபதி மன்னர் குளுவன் குடி கண்மாய்ப் பாசனத்திலுள்ள நஞ்சை புஞ்சை நிலங்களை சர்வமான்யமாக வழங்கியதைக் குறிப்பதற்காக இந்த கல்வெட்டு நாட்டப்பட்டுள்ளது. தானம் வழங்கப்பட்ட கிராமம் முத்துநாடு என்ற பகுதியில் அமைந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுளளது. இந்தத் தர்மத்தைச் சேதுபதி மன்னருக்காக இந்தப் பகுதியின் பொறுப்பிலிருந்த சேதுபதி அலுவலா ரகுநாத காங்கேய சேர்வைக்காரன் என்பவர் சேதுவில் தானம் செய்து கொடுத்ததாகத் தெரிய வருகிறது. இந்தக்கல்வெட்டிலிருந்துசேது நாட்டின் நிர்வாகம் பற்றிய மிக முக்கியமான செய்தி ஒன்று அறிய முடிகிறது. ரெகுநாத திருமலை சேதுபதி மன்னரது ஆட்சிக் காலத்தில் சேது நாட்டின் வடக்கு எல்லை புதிதாக இணைக்கப்பட்ட பல பகுதிகளுடன் விரிவடைந்ததை ஏற்கனவே பார்த்தோம். இந்தப் பகுதிகளின் நிர்வாகம் சீராக நடைபெறுவதற்காக சேது மன்னர்து அரசப் பிரிதிநிதிகளாக முழு அதிகாரங்களைக் கொண்ட சேர்வைக் காரர் என்ற பதவி ஏற்படுத்தப்பட்டது. அவர்களே தங்களது உசிதம் போல சேது மன்னருக்காக சர்வ மான்ய அறக்கொடைகள் வழங்கி உள்ளனர்.