பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 – =சேதுபதி மன்னர் சமுதாயப் பணிகளுக்குமாகப் பல சாதனைகளைப் புரிந்துள்ளார். இதுவரை முந்தைய சேதுபதி மன்னர் யாரும் மேற்கொள்ளாத வகையில் பல திருக்கோயில்களுக்கும், திரு மடங்களுக்கும், தேவாலயத்திற்கும் பல ஊர்களைச் சர்வ மானியமாக வழங்கியுள்ளார். இராமேஸ்வரம் போன்ற திருக்கோயில் திருப்பணிகளும் அவரது சாதனைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. அவரது திருப்பணிகளில் நயினார் கோவில் கட்டுமானத்தை முழுவதுமாகத் திருத்தி அமைத்துள்ளார். இந்தக் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ள நயினார் கோவில் புணர்அமைப்பு பற்றிய செய்தி ஆங்கிலேயரது நிர்வாகம் ஏற்படுவதற்கு முன்னர் நிகழ்ந்ததைக் குறிப்பதாகும். நயினார் கோவில் என்ற ஊர் இராமநாதபுரம கோட்டைக்கு வடமேற்கே பதினைந்து கல் தெலைவில் அமைந்துள்ள சிவத்தலமாகும். இங்கு மருத மரத்தின் நிழலில் இறைவன் எழுந்தருளி இருப்பதால் இறைவன் பெயர் மருதிஸ்வரர் எனவும், இந்த தலத்தின் பெயர் மருதவனம் அல்லது மருதூர் எனவும் வழங்கலாயிற்று. இந்த தலத்தின் இறைவனைப் பற்றி பல சிற்றிலக்கியங்கள் இயற்றப்பட்டுள்ளன. கி.பி.17ம் நூற்றாண்டின் இறுதியில் தளமலைக் கண்ட தேவர் என்ற புலவர் மருதூர் அந்தாதி என்ற நூலையும் கி.பி.18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முத்து நாயகம் என்ற நல்ல முத்துப் புலவர் பாடியுள்ள மருதூர் பதிகமும் கி.பி.19ஆம் நூற்றாண்டில் எட்டையபுரம்.கருத்தமுத்துப் புலவர்_பாடிய மருதூர்ப் புராணமும் கி.பி.20ஆம் நூற்றாண்டில் சக்திவேல் ஆசாரி என்பவர் பாடிய நயினார் கோவில் வழிநடை அலங்காரச் சிந்து என்ற நூலும் குறிப்பிடத்தக்கவையாகும். இங்குள்ள மருதிஸ்வர் கோயில் உலக வழக்கில் நயினார் கோயில் என வழங்கப்பட்டு வருகிறது. நயினார் என்பது இறைவனைக் குறிக்கும் பொதுவான பெயராகும். கி.பி.19ஆம் நூற்றாண்டிலவரகுண பாண்டியனால் அமைக்கப்பட்ட இந்தத் திருக்கோயில் மிகவும் பழுதடைந்து இருந்ததை முத்து இராமலிங்க சேதுபதி