பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வெட்டுக்கள் | 4:3 l இயல் 31 | இராமநாதபுரம் ஜமீன்தார்கள் மறவர் சீமையின் தன்னரச மன்னர்களில் கி.பி.1762 முதல் இராமநாதபுரம் மன்னராக இருந்த முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி ஆற்காட்டு நவாப்பின் முகவர்களாகப் பணியாற்றிய ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனியாருக்கு அவர்கள் விரும்பிய வண்ணம் இராமநாதபுரம் சீமையில் வியாபாரச் சலுகைகளோ அல்லது முன்னுரிமைகளோ வழங்க மறுத்து வந்ததால் அவரை ஆட்சி பீடத்தில் இருந்துஅகற்றுவதற்கு சூழ்ச்சி செய்தனர். அவர்களது ரகசியத் திட்டத்தைக் கி.பி.1794-ல் கம்பெனியாரின் தலைமை ஒப்புதல் அளித்தது. ஆனால் அந்த வருடம் இராமநாதபுரம் சீமையில் கடுமையான வறட்சி நிலவி வந்ததால் அந்தத் திட்டத்தை கி.பி.1795-ல் செயல்படுத்தினர். அந்த ரகசிய திட்டத்தின்படி 8.2.1795ஆம் தேதி அதிகாலையில் கம்பெனியாரது பாளையங்கோட்டை கயத்தாறு, பாசறைகளில்