பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15.1 கல்வெட்டுக்கள்= ** ஜமீன்தாரி எனவும் அழைக்கப்பட்டது. இங்கு இராமநாதபுரம் ஜமீன்தாரி நிர்வாகத்தின் தலைவருக்கு வேறு எவ்வித அதிகாரமும் கிடையாது. சேதுபதி மன்னர் மேற்கொண்டிருந்த நீதி விசாரணை தண்டனை வழங்குதல், நலப்பணிகள் போன்ற பொதுப்ணிகளை மேற்கொள்வதற்கு முதன்மை நீதி மன்றங்களும் (செசன்ஸ் கோர்ட்) நியாயம் வழங்க நடுவர்களும் (மேஜஸ்ட்டிரேட்டுகளும்) தனியாக நியமனம் செய்யப்பட்டனர். இந்தப் புதிய முறை சேதுபதிச் சீமையில் 21.2.1803 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் படி சிறையில் அடைக்கப்பட்ட முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதியின் தமக்கை ராணி மங்களேஸ்வரி நாச்சியார் முதலாவது ஜமீன்தாராக நியமனம் செய்யப்பட்டார். ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் முதல் தேதியில் தொடங்கி அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துடன் முடியும். பசலி என்ற புதிய நிதி ஆண்டில் இராமநாதபுரம் ஜமீன்தார் ஆங்கில கம்பெனியாருக்கு 3 1/4 இலட்சம் ரூபாயை குடிமக்களது தீர்வையாக வசூலித்து செலுத்த வேண்டும். இந்த முறையில் கி.பி.1803 முதல் கீழ்க்கண்டவர்கள் இராமநாதபுரம் ஜமீன்தார்களாக பணியாற்றி வந்துள்ளனர். 1. ராணி மங்களேஸ்வரி நாச்சியார் கி.பி.1803-1812 2. அண்ணாசாமி என்ற விஜயராகுநாத சேதுபதி கி.பி.1813 3. ராணி சிவகாமி நாச்சியார் - 5.2.1814 முதல் 5.3.1815 வரை 4. கதர் அதாரத் என்ற நீதிமன்ற நிர்வாகம்- 6.2.1816 முதல் கி.பி.1829 வரை 5. முத்து விஜயன் சேதுபதி - கி.பி.1830 6. ராமசாமி சேதுபதி - (த/பெ அண்ணாசாமி சேதுபதி சுவீகாரப் புத்திரன்) - கி.பி.1830-1840