பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153 கல்வெட்டுக்கள் - - கிழக்கிந்திய கம்பெனியின் சென்னை கவர்னரையும் அணுகினார். ஆனால் உடனடியாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் 29.4.1803-ஆம் தேதியன்று மங்களேஸ்வரி.நாச்சியாரை இராமநாதபுரம் ஜமீன்தாரினியாக ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியார் நியமனம் செய்தார்கள். அப்பொழுது சுமார் 6 இலட்சம் ரூபாய் வருட வருமானமுள்ள இராமநாதபுரம சமஸ்தானத்தில் குடிமக்களிடம் தீர்வையை வசூலித்து மூன்றேகால் லட்சம் ரூபாயை ஆண்டு தோறும் ஆங்கில கம்பெனியாருக்குச் செலுத்த வேண்டியது ராணியாரது பொறுப்பாகும். நியாயம் வழங்குதல், குற்றவாளியைத் தண்டித்தல் போன்ற அதிகாரங்கள் ராணியாருக்குக் கிடையாது. இந்த ராணியாரைப் பற்றிய உருவப்படமோ, கற்சிலையோ இல்லாத நிலையில் இவரது உருவத்தைச் சரியாகக் கற்பனை செய்து பார்த்துக் கொள்ளும் வகையில் ஆவணம் ஒன்று கிடைத்துள்ளது. இது கி.பி.1804ல் லண்டனிலிருந்து கொழும்பு நகருக்கு வந்த ஜார்ஜ் வாலண்டினா பிரபு என்பவர் இராமேஸ்வரத்திற்கும் அடுத்து இராமநாதபுரத்திற்கும் வருகை தந்தார். இராமநாதபுரம் அரண்மனையில் ராணியாரைச்சந்தித்து அவர் வரைந்துள்ள சில குறிப்புகளிலிருந்து இவர் உருவத்தை ஓரளவு தெரிந்து கொள்ளும் வகையில் அவை அமைந்துள்ளன. "இராமநாதபுரம் ராணி மங்களேஸ்வரி நாச்சியாரைச் சந்தித்தேன். அண்மையில் அவரது கணவர் காலமாகியிருந்தார். ஆதலால் ராணியாரது தோற்றத்தில் சிறிது மெலிவு காணப்பட்டது. நல்ல மென்மையான வெள்ளை நிற சீனப்பட்டினால் சேலையும், மேலாடையும் அணிந்திருந்தார். சுமார் ஆறடி உயரம் உள்ள நல்ல தோற்றம், உடலின் நிறம் கருமையாக இருந்ததுடன் அவரது பற்களும் கருமையான பூச்சுடன் கருமையாகக் காணப்பட்டது. இரு தோள்களையும் தொட்டு தொங்கும் பொன்னாலான தொங்கட்டான்களை அவரது இரு காதுகளிலும் அணிந்திருந்தார். பார்ப்பதற்கு நல்ல தோற்றம் உடையவராக இருந்தார். ஆனால்