பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15Բ - சேதுபதி மன்னர் வழங்கிய அறக்கொடையைப் பற்றிய கல்வெட்டு ஒன்று கிடைத்துள்ளது. அதன் பகுதிகள் சிதைந்து விட்டதனால் அதனை படிக்க முடியவில்லை. ராஜசிங்கமங்கலத்திலிருந்து பூலாங்குடிக்கு செல்லும் வண்டிப் பாதையில் இந்தக் கல்வெட்டு அமைந்திருந்தது. இந்தக் கல்வெட்டு வாசகம் கீழே வருமாறு: வரி 1. "1806ஆம் வருடம் குலை மாதம் 24ம் தீ அட்சய வருஷம் ஆடி மாதம் 1ம் தேதி பூரீ மது ஹிரண்ய கர்ப்பயாஜி ரவிகுலமுத்துவிஜய ரெகுநாத ராணி சேதுபதி வரி 2 மங்களேஸ்வரி நாச்சியாரவர்கள் சாலைக் கிராமம் தாலுகா வரவணி மாகாணம் சேகரம் பூலாங்குடி கிராமம் பூவில் இருந்ததிருக்கண்ணுடைய அய்யனார்க்கு உபயமான்யம் எல்கையாவது . . . . . . . . வரி 3. வாணியக்குடி கிராமம் துரைச்சாமி சேருவை புஞ்சைக்கும் கிழக்கு புல்லாரேந்தல் காலாங்கரைக்குத் தெற்கு புஞ்சை மாலுக்கும் கீழ் மேலோடிய பாதைக்கும் வரி4. தென்வட மேல் ஓடிய பாதைக்கும் மேற்கு நஞ்சை மாலுக்கும் வடக்கு இந்த நான்கெல்லைக்கும் உள்பட்ட மான்யம் அரண்மனை மான்யம்" o இந்தக் கல்வெட்டிலிருந்து கி.பி.19ஆம் நூற்றாண்டில் இராமநாதபுரம் சமஸ்தானத்தில் 17 பிரிவுகளில் ஒன்றாகசாலைக்கிராமம் இருந்து வந்தது என்றும் (தற்பொழுது இளையான்குடி வட்டத்தில் உள்ளது) இந்தப் பிரிவுகளில் பகுதியாக தாலுக்கா, மாகாணம் என்ற அமைப்புக்கள் இருந்து வந்ததும் தெரியவருகிறது.

  • புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு