பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153 கல்வெட்டுக்கள் - மற்றும் துரைராஜ் நாச்சியார் ஆகியோரது கார்டியனாக இருந்த முத்து வீராயி நாச்சியார் ராணிமுத்து வீராயி நாச்சியார் என்ற பெயருடன் ஜமின்தாரினி ஆனார். இவரது நிர்வாகத்தின் பொழுது இராமநாதபுரம் ஜமின்தார் ஆக சரியான வாரிசு யார் என்பதைப் பற்றிய பல வழக்குகள் மதுரை நீதிமன்றத்திலும், சென்னை மாநகர நீதிமன்றத்திலும் தொடரப்பட்டன. அதே சமயத்தில் ராணி முத்து வீராயி நாச்சியார் பல பொதுப் பணிகளையும் மேற்கொண்டு இருந்தார் என்பதற்குச் சான்றாக விறலிவிடுதூது என்ற சிற்றிலக்கியமும் வேறு சில கல்வெட்டுக்களும் ஆதாரமாக அமைந்து காணப்படுகின்றன. இராமநாதபுரம் சீமை வரலாற்றில் சேதுபதி மன்னர் மரபினைச்சேர்ந்த மூன்று பெண்மணிகள் கி.பி.18ஆம் நூற்றாண்டிலும் கி.பி.19ஆம் நூற்றாண்டிலும் சமஸ்தானத்தின் பொறுப்பினை ஏற்று சிறப்பாகச் செயல்பட்டு வந்தனர் என்பதை வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன. கி.பி.1762ல் முதலாவது முத்துஇராமலிங்க சேதுபதி என்ற பெயருடன் ஆட்சிக்கு வந்த சேதுபதி மன்னர் மிகச் சிறிய பாலகனாக இருந்ததால் அவரது தாயார் முத்துத் திருவாயி நாச்சியார் என்பவர் சேதுபதி மன்னரது அரசபிரநிதியாக கி.பி.1772 வரை அதிகாரம் செலுத்தி வந்தார். கி.பி.1771ல் சேதநாட்டின் மீது படையெடுத்துவந்த தஞ்சை மராட்டிய மன்னர் துல்ஜாஜியும் அவனது படைகளும், சேது நாட்டின் வடக்குப் பகுதியைக் கைப்பற்றி இராமநாதபுரம் கோட்டையை முற்றுகை இட்டனர். சுமார் 40 நாட்களுக்கு மேல் நீடித்த இந்த முற்றுகையின் பொழுது இராணி முத்துத் திருவாயி நாச்சியார் மிகுந்த திறமையுடனும், ராஜதந்திரத்துடனும் நடந்துகொண்டதுடன்மராட்டிய மன்னர் துல்ஜாஜி மிகுந்த இழப்புகளுக்குப் பிறகு ராணியுடன் சமரச உடன்பாடு ஒன்றில் கையெழுத்து இட்டுவிட்டு வெறும் கையுடன் திரும்பிச் சென்றார். அடுத்து 29.5.1772ல் ஆற்காடு நவாப் முகமது அலியின் படைகளும் ஆங்கிலேயரின் கூலிப் படைகளும்