பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வெட்டுக்கள்= இந்தக் கல்வெட்டின் காலம் கி.பி.1832. இந்தக் கோயிலை ராணி முத்து வீராயி நாச்சியார் நிர்மானித்தார் என்ற செய்தியைக் குறிப்பிடுவதே இந்தக் கல்வெட்டின் செய்தியாகும். இந்தக் கோயிலின் இறைவியான ஆண்ட அம்மன் என்ற பெயரில் அம்மன் சிலை ஒன்று பிரதிட்டை செய்யப்பட்டுள்ளது. சேது நாட்டில் ஆண்ட அம்மன் என்ற பெயரில் சிறு தெய்வம் வேறு எந்தக் கோயிலிலும் இல்லை. ஆனால் அபிராமத்தை அடுத்து ஆண்ட நாயகிபுரம் என்ற சிற்றுார் மட்டும் உள்ளது. ஆண்டநாயகி என்ற பெயர் தடாதகை பிராட்டியாக பிறந்து மதுரையை ஆண்ட மீனாட்சி அம்மனின் மறுபெயர் ஆகும். இந்தக் கல்வெட்டில் இராணி முத்துவீராயி நாச்சியாரை அப்பொழுதைய ஜமின்தாரான ராமசாமி சேதுபதியின் தாயார் என குறிப்பிட்டு இருப்பது சில வரலாற்று ஆய்வாளர்களுக்கு குழப்பமாகத் தோன்றலாம். உண்மையில் இந்த ராமசாமி சேதுபதி என்பவர் முத்து வீராயி நாச்சியாரும், முத்து விஜயன் சேதுபதியும் சட்ட பூர்வமாக சுவீகாரம செய்து கொள்ளப்பட்டவர் ராமசாமி சேதுபதி ஆவார். ராமசாமி சேதுபதி முத்து வீராயி நாச்சியாரின் உடன்பிறந்த சகோதரர் ஆவார். ஆனால் இராமநாதபுரம் அரண்மனை மரபு என்பது சேதுபதி பட்டத்திற்கு யார் தேர்ந்தெடுக்கப்பட்டு மன்னராகிராரோ அவர் தமக்கு முன்பு ஆட்சி செய்த மன்னரை தனது தந்தையாகக் கொள்வது என்பது தான் அந்த மரபு. இந்த முறையில் தான் ரெகுநாத கிழவன் சேதுபதி,திருமலை சேதுபதி, மன்னரையும், முத்துவிஜய ரெகுநாத சேதுபதியும், அவருக்கு முன்பு இருந்த கிழவன் சேதுபதியையும் தங்களுக்குத் தந்தையாக அவர்களது செப்பேடுகளில் குறிப்பிட்டு இருப்பது இங்கு ஒப்புநோக்கத் தக்கதாகும். இந்தக் கல்வெட்டு வாசகம் பின்வருமாறு: 1. "உஸ்வஸ்தியூரீ சாலிவாகன சகாப்தம் 1754 கலியுகாதிஹ 4934