பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வெட்டுக்கள் 167 l இயல் 34 | இராமநாதபுரம் திரெளபதி அம்மன் கோயில் கல்வெட்டு இந்தக் கோயில் இராமநாதபுரம் கோட்டைக்குள் இராமநாதபுரம் அரண்மனைக்கு வடக்கே முகவை ஊரணியின் கிழக்குக் கரையில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலை ராணி முத்துவீராயி நாச்சியாரும் அவரது சகோதரர் முத்துச் செல்லத் தேவரும் திருப்பணி செய்த விவரத்தை இந்தக் கல்வெட்டுக் குறிப்பிடுகின்றது. காலம் சென்ற ராமசாமி சேதுபதியின் பெண் மக்கள் இருவருக்கும் சில காலம்வரை அவர்களது தாய்மாமன் முத்துச் செல்லத் தேவர் என்ப்வர் கார்டியனாக இருந்ததால் அவரது பெயரும் இந்தக் கல்வெட்டில் பொறிக்கப்பட்டு இருப்பதுடன் சேதுபதி என்ற பட்டமும் அதில் சேர்க்கப்பட்டுள்ளது.