பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ס17 சேதுபதி மன்னர் l இயல் 35 | இதம்பாடல் - சத்திரக் கல்வெட்டு இராமநாதபுரம் கன்னியாகுமரிச் சாலையில் இதம்பாடல் கிராமத்தின் சாலையின் தெற்குப் பகுதியில் இந்த அன்ன சத்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் காலம் கி.பி.1837 இந்தச் சத்திரத்தைக் கன்னியாகுமரி சேது யாத்ரிகர்களுக்குப் பயன்படுத்துவதற்காக ராணி முத்து வீராயி நாச்சியாரும். அவரது சகோதரர் முத்துச் செல்லத் தேவரும் நிர்மானித்தது. இந்த சத்திரம முறையாக இயங்கி வருவதற்கு எந்தெந்த ஊர்கள் தானமாக வழங்கப்பட்டன என்ற விவரம் தெரியவில்லை. மேலும் இந்தக் கல்வெட்டிலிருந்து ராணி முத்து வீராயி நாச்சியாரின் சொந்த ஊர் இதம்பாடல் கிராமம் என்பதும். அவரது பெற்றோர்கள் முனியாண்டித் தேவர் - சிவனாயி ஆத்தா என்ற செய்தியும் தெரியவருகிறது. இந்த சத்திரத்தில் முத்து வீராயி