பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

173 கல்வெட்டுக்கள்= திருப்பணி வேலைக்காக இதே கிராமத்தில் உள்ள உகந்தானேந்தல் என்ற கண்மாயும் வழங்கப்பட்டு இருப்பது இந்தக் கல்வெட்டில் இருந்து தெரியவருகிறது. இந்த தானம் வழங்கிய காலம் பற்றிய விவரம் தவறாகக் கொடுக்கப்பட்டுள்ளது. சக ஆண்டு 1702-க்குச் சரியான ஆங்கில வருடம் கி.பி.1781 ஆகும். இந்தக் கால கட்டத்தில் இராமநாதபுரம் மன்னராக இருந்தவர் முத்துஇராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி ஆவார். கல்வெட்டில் குறிப்பிடப்பெறும் ராமசாமி சேதுபதியின் காலம் கி.பி.1830-க்கும் 1840க்கும் இடைப்பட்ட காலம் ஆகும். இந்தக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் நயினார்கோவில் பரமக்குடி வட்டத்தில் உள்ள சேது சமஸ்தானத்தின் முக்கியமான கோயில் ஆகும். இந்த ஊரின் சரியான பெயர் திருமருதூர் என்பது. இங்கு எழுந்தருளி இருக்கும் இறைவர் நாகநாத சுவாமியை இந்தப் பகுதி மக்கள் பல்லாண்டுகளாக நயினார் என்று அழைத்து வருவதால் இந்தத் தலத்தின் பெயரும் நயினார் கோயில் என்றே வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தலத்தின் பெருமையை விளக்கும் வகையில் திருமருதுர் அந்தாதி, திருமருதுர் புராணம் நயினார் கோவில் பதிகம், நயினார் கோவில் வழிநடைச் சிந்து ஆகிய இலக்கியங்கள் இயற்றப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டின் வாசகம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.* . "சுவஸ்த பூரீ சாலிவாகன s காத்தம் 1702 இதன்மேல் செல்லாநின்ற கலியு . . கம் 4881 இதன் மேல்ச்