பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

177 கல்வெட்டுக்கள் கல்விமானாக விளங்கியதுடன் மிகச் சிறந்த சைவ சித்தாந்தியராகவும் சிறந்த சொற்பொழிவாளராகவும் இருந்தார். இவைகளுக்கெல்லாம் மேலாக மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என்னோற்றான கொல் என்னும் சொல் என்ற வள்ளுவத்திற்கு ஏற்ற வாரிசாக வாழ்ந்தவர் தான் மன்னர் பாஸ்கர சேதுபதி. தமது முன்னோர்களைப் போன்று தமிழிலும், வடமொழியிலும், வித்தகராக விளங்கிய இவர் நலிவடைந்து நாடிவந்தவர்களுக்கும், பாடி வந்த புலவர்களுக்கும் அள்ளி அள்ளிப் பொன்னும் பொருளும் வழங்கும் பண்பாளராக வாழ்ந்தார். ஆலயம்சிர் ஆகுமா அரும்புலவர் வாழ்வாரா காலமெல்லாம் தருமம் தழைக்குமோ - ஞாலச் சாந்தகுணச் சேதுபதி தம்மரபில் பாஸ்கரனாம் வேந்தன் பிறவா விடில். இவ்வாறு இத்தகைய இனிய பண்புகளை உடைய இளம் மன்னர் பாஸ்கரச் சேதுபதியைப் பற்றிப் புலவர் ஒருவர் பாடியுள்ளார். தேவாரம் பாடிய மூவர்களை நினைவு கூறும் வண்ணம் இந்த மன்னர் திருக்கோயில்களுக்கு செல்லும் பொழுதெல்லாம் தான் அந்தக் கோயிலின் இறைவர் மீது பதிகம் பாடுவதையும், அந்த இறைவருக்கு அணிமணிகளை அன்பளிப்பாக வழங்குவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். இவர் மேற்கொண்ட கோயில் திருப்பணிகள் பற்றிய கல்வெட்டுக்கள் சில கிடைத்துள்ளன. இந்த மன்னரைப் போன்று மிகச் சிறந்த சிவபக்தையாக விளங்கிய இவரது தாயார் முத்தாத்தாள் நாச்சியார் வேண்டுதலின் படி இந்த மன்னர் ராமநாதபுரம் நகரின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள நொச்சிவயல் ஊரணியின் மேற்குக் கரையில் ஒரு சிவாலயத்தை எழுப்பினார். அந்த ஆலயத்திற்கு அவரது தாயாரின் ஆத்ம குருவான பிரம்மா அம்மாள் என்ற பெண் ஞானியின் பெயரால் பிரம்ம புரீசுவரர்