பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1B1 கல்வெட்டுக்கள்= - = - விழா நடப்பதற்கும், ஏற்பாடு செய்தார். இந்த விழாவினை முறையாக நடத்தி வைப்பதற்காக இராமேஸ்வரம் ரகுநாத குருக்கள் மகன் சங்கரன் குருக்களை நியமனம் செய்ததைச் செப்பேட்டுச் செய்தி ஒன்று கூறுகிறது." இந்த விழாவினை மகாநோன்பு அல்லது மகர் நோன்பு என வழங்குதல் உண்டு. சாதாரண காலங்களில் இந்த அம்பாளுக்கு எருமைக் கடாவினையும் பலியிட்டு படைப்பதும் வழக்கமாக இருந்தது. சைவ சித்தாந்தியரான மன்னர் பாஸ்கர சேதுபதி கி.பி.1894ல் இந்த உயிர்ப்பலி பூஜையை தவிர்ப்பதற்காகவாமபூஜை எனப்படும் வகையில் பிற கோயில்களில் நடப்பதைப் போன்று அம்பாளுக்கு பூஜை, நைவேத்யம், அபிஷேகம் ஆகிய நடைமுறைகளை நடத்தி வர ஏற்பாடு செய்தார். அப்பொழுது சிருங்கேரி சாரதாமடத்தைச் சார்ந்த ஜகத்குரு சச்சிதாநந்த அபிநவ நரசிம்ம தீர்த்த பாரதி சுவாமிகளை வரவழைத்து அம்பாளின் பூரீ சக்கரத்தை மாற்றி அமைத்து உயிர்ப்பலிக்குப் பதிலாக வாமபூஜை நடத்தும் முறையை ஏற்படுத்தினார். மேலும் இந்தக் கோயிலின் பயன்பாட்டிற்கென இத்தாலி நாட்டில் மிலான் நகரத்திலிருந்து ஒரு பெரிய வெண்கல மணியையும் வரவழைத்து ஆலயத்தில் நிறுவினார்’ பராந்தக சோழன், தில்லை நடராஜர் கோயில் கோபுரங்களுக்கு பொன் வேய்ந்ததுபோன்று பாஸ்கர சேதுபதி மன்னரும் அம்பாளின் கருவறையின் மேற்கோபுரத்தை பொன் தகட்டினால் சூழச் செய்து மகிழ்ந்தார். இந்த நிகழ்ச்சியின் நினைவாக கீழ்க்கண்ட கல்வெட்டினையும், அந்தக் கோயிலில் கோபுரத்தில் பொறித்து வ்ைத்துள்ளார். s இந்தக் கல்வெட்டின் வாசகம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.* "கி.பி.1893 ஸ்வஸ்தி பூதி சாலிவாகன சகாத்தம் 1815 1. கமால் டாக்டர் எஸ்.எம். சேதுபதி மன்னர் செப்பேடுகள் (1993) 2. கமால் டாக்டர் எஸ்.எம். மன்னர் பாஸ்கர சேதுபதி (1992)