பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வெட்டுக்கள் 1B3 l இயல் 39 | கோதண்ட ராமர் கோயில் கல்வெட்டு இராமநாதபுரம் கோட்டைக்குள் இருக்கும் பழமையான கோயில் சொக்கநாத சுவாமி ஆலயமாகும். இந்த ஆலயத்தினை எழுப்பித்தவர் மன்னர் தளவாய் சேதுபதி எனப்படும் இரண்டாவது சடைக்கன் சேதுபதி ஆவார். இவரது காலம் கி.பி.1630-1645 வரை. இந்தக் கோயிலின் தென்பகுதியில் பெருமாள் கோயிலையும் அவரை அடுத்து வந்த திருமலை ரெகுநாத சேதுபதி மன்னர் ஏற்படுத்தினார். இந்தக் கோயில் கால நீட்சியில் சிதிலமடைந்தது. இதனை உணர்ந்த மன்னர் பாஸ்கர சேதுபதி அவர்கள் திருக்கோயிலில் மறு அமைப்புச் செய்து திருப்பணி செய்தார். வசந்த விழாவும், பெருமாள் தேவியுடன் ஆரோகணித்து வீதிஉலா வரும் தேரோட்டத் திருவிழாவினையும் ஏற்படுத்தினார். சமயப் பொறையில் மிக்க சேது வேந்தர்களின் சாதனையாக இந்தத் திருக்கோயில் விளங்கி வருகிறது.