பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1BE; சேதுபதி மன்னர் l இயல் 40 | பாம்பன் கடற்கரைக் கல்வெட்டு மன்னர் பாஸ்கர சேதுபதி அவர்கள் பாம்பன் துறைமுகத்தில் 22.1.1897ம் தேதி பிற்பகல் கரை இறங்கிய சுவாமி விவேகானந்தர் வருகையை என்றென்றும் நினைவூட்டும் வகையில் ஒரு கல்வெட்டினை சேதுபதி மன்னர் பாம்பன் கடற்கரையில் அமைத்தார். கி.பி.1893ல் அமெரிக்க நாட்டு சிக்காகோ நகளில் நடைபெற்ற அனைத்து உலக சமய மாநாட்டில் கலந்து கொள்வதற்காகச் சுவாமி விவேகானந்தரைத் தனது சொந்தச் செலவில் மன்னர் அனுப்பி வைத்தார். சுவாமிகளுக்கு ஏற்பட்ட அந்தப் புதிய அனுபவம் இந்திய மக்களின் மிகச் சிறந்த வெற்றியாக அமைந்தது. இந்து சமயத்தில் தொன்மையையும். இந்தியத் திருநாட்டின் சமயப்பண்பாட்டு, நிலைகளை அறிந்த மேனாட்டார் சுவாமி விவேகானந்தருக்குப் Lמה6ו ஊர்களில் பாராட்டுக்களைத் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சுவாமிகள்