பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

187 கல்வெட்டுக்கள் – ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கெல்லாம் சென்று விட்டு இலங்கை நாட்டுக் கொழும்பு வழியாக தாயகம் திரும்பிய சுவாமி விவேகானந்தர் முதன் முறையாக சேதுபதி மன்னரது பாம்பன் துறைமுகத்தில் கரை இறங்கினார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வினைக் குறிக்கும் வண்ணம் பாம்பன் கடற்கரையில் சுவாமிகள் படகு கரையைவிட்டு இறங்கிய தரையில் வெற்றித்துாண் ஒன்றை மன்னர் நிறுவினார். அதில் தான் இந்தக் கல்வெட்டும் பொறிக்கப்பட்டிருந்தது. ஆனால் 105 ஆண்டுகளுக்குப் பின்னர் அந்தக் கல்வெட்டு இப்பொழுது அங்கு இல்லை. சத்தியமேவேஜெயதே என்ற உபநிடத சொல்லை மங்கலச் சொல்லாக கொண்ட வாசகம் தலைப்பாக இந்தக் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டின் வாசகம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.* சந்தியமேவஜெயதே "இந்திய நாட்டின் சமயப் பண்பாட்டுச் சிறப்பினை மேலை நாடுகளில் பரப்பி வெற்றிப் பரணியுடன் தாயகம் திரும்பிய சுவாமி விவேகானந்தரது புனித பாத துளிகள் பட்ட முதல் புனித இடம் இது”.

  • புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள கல்வெட்டு