பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 சேதுபதி மன்னர் அனைத்தும் தமிழக வரலாற்றிற்கு உறுதுணையாக உதவுபவை என்றாலும், இன்னும் படியெடுக்கப்பட்ட, படியெடுக்கவிருக்கும் கல்வெட்டுக்களும், பட்டையங்களும், ஓலைமுறிகளும் தமிழக ஆய்வாளர்களுக்கு கிடைக்கும் காலம்தான் தமிழக வரலாற்று மறுமலர்ச்சி காலம் எனக் கூறலாம். இவைகள் அனைத்தும் தமிழின் கிரந்த எழுத்துக்கள், அரபி, பார்சி, வடமொழி, தெலுங்கு. தாமிழி வட்டெழுத்து ஆகிய எழுத்து வரிகளில் காணப்படுகின்றன. இந்தக் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பெறும் அறக்கொடைகளை கீழ்க்கண்ட பகுப்புகளில் பொருந்துவனவாக உள்ளன. அறக்கொடைகள் விபரம் : 1. திருக்கோயில்கள் - 29 2. திருமடங்கள் 3. அன்னசத்திரங்கள் - 2 4. பள்ளிவாசல்கள் - 1 5. தேவாலயங்கள் - 1 6. இதரவகை - 2 7. கொடைகள் - 2 இந்தக் கல்வெட்டு கீழ்கண்ட வகையினராக அமைகிறது அ. சைவ சமய கோயில்கள்