பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 - - - - சேதுபதி மன்னர் 2. இந்திய தொல்லியல் அளவீட்டுத் துறை வெளியிட்டவை - 5 3. இப்பொழுது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டவை - 24 மேலும் சேதுபதி மன்னர்கள் வெட்டிவித்துள்ள இந்தக் கல்வெட்டுக்கள் அந்த மன்னர்களது 500 வருட கால ஆட்சியினை எடுத்து இயம்பும் வரலாற்றுக் குறிப்புக்களாகக் கொள்ளலாம். ஏனெனில் அந்த மன்னர்களது நீண்ட நெடிய ஆட்சியில் நூற்றுக்கணக்கான கல்வெட்டுக்களையும், செப்பேடுகளையும், ஒலைமுறிகளையும், தானசாசனமாக அவர்கள் வழங்கி இருந்தனர். அவை அனைத்தும், வரலாற்று உணர்வு, பராமரிப்பு உணர்வு ஆகிய துறைகளில் அந்த மன்னர்களுக்கும் அவர்களது அலுவலர்களுக்கும் அக்கறை இல்லாத காரணத்தினால் இவைகளில் பெரும்பாலான எண்ணிக்கையில் இந்த ஆவணங்கள் அழிந்து மறைந்து விட்டன. இதனைப் புலப்படுத்தும் வகையில் சென்னையிலுள்ள தமிழ்நாடு அரசு ஆவணக் காப்பக ஆவணங்களும், பதிவேடுகளும் அமைந்திருப்பதை ஆய்வாளர்கள் அறிந்து கொள்ள இயலும். அதுவரை அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் தென்னக அரசியலைத் தமதாக்கிக் கொண்டிருந்த ஆற்காட்டு நவாப் வழியினரை அகற்றிவிட்டு தங்களது ஆட்சியின் கீழ் கி.பி.1801 முதல் தென்னகம் முழுவதையும் ஒரு சேர அமைத்த ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனியார் கி.பி.1811இல் தயாரித்த பதிவேடு ஒன்றின் படி திருக்கோயில்கள், திருமடங்கள், அன்னசத்திரங்கள், தேவாலயங்கள் மற்றும், பள்ளிவாசல்கள், பண்டிதர்கள், புலவர்கள், அவதானிகள் ஆகியோர்களுக்கு தானம் அளித்த சேதுபதி மன்னர்கள் (594)ஐந்நூற்று தொன்னூற்று நான்கு செப்புப் பட்டையங்களைப் பட்டியலிட்டுக் கொடுத்துள்ளனர். ஆனால் இராமநாதபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளுக்குச் சென்று பத்து ஆண்டுகளாக சேது மன்னர்களது பட்டையங்களைத் தேடிப் பிடித்த எனக்கு வெறும் தொன்னுாறு செப்பேடுகள் மட்டும் தான் கிடைத்தன. அவைகளை கி.பி.1994ல் சேதுபதி மன்னர் செப்பேடுகள் என்ற தலைப்பில்