பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 கல்வெட்டுக்கள்= - கி.பி.1710 வரை ஆட்சி செய்த கிழவன் ரெகுநாத சேதுபதி கள்ளர் நாட்டை ரெகுநாத ராய தொண்டைமானிடமிருந்து மீண்டும் கைப்பற்றுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த மன்னரை அடுத்து சேதுபதியான திருவுடையாத் தேவர் என்ற முத்து விஜய ரகுநாத சேதுபதியும் (கி.பி.1710-1725) கள்ளர் சீமையின் ஆடசியைப் பற்றி கவலை கொள்ளவில்லை. இந்த மன்னருக்குப்பிறகு சேது நாட்டில் கி.பி.1725-26 களில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களின் காரணமாக சேதுநாட்டின் வடக்கு, வடகிழக்குப் பகுதியான பொலியூர் நாடு, புனல் பறளைய நாடு, கானப்பேர் நாடு, உருவாட்டி நாடு, ஊஞ்சனை நாடு, நாலுகோட்டை நாடு, கண்டதேவி நாடு, அதளையூர் நாடு, தென்னாலை நாடு, சூரக்குடி நாடு, கோமு நாடு, திருப்பத்துர் நாடு, புறமலை நாடு, பூங்குன்ற நாடு ஆகிய நாடுகளைக் கொண்ட சிவகங்கை அரசு என்ற சின்ன மறவர் சீமை வரலாற்றில் இடம்பெற்றது. ஆனால் அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, திருவாரூர் சீமைகள், மீண்டும் கி.பி.1728ல் தஞ்சை மராட்டிய அரசுடன் இணைக்கப்பட்டுவிட்டன. சேதுபதிகளின் ஆட்சியின் வீழ்த்சி மேலேகண்ட அரசியல் மாற்றங்களினால் சேதுபதிச் சீமை வளர் பகுதியை அடுத்தடுத்த மூன்று பிரிவுகளாக பிரிவு பட்டுப், பிரிந்து சென்றதால், சேதுபதி மன்னர்களது பேராற்றலும், பெரும்புகழும் நாளடைவில் சிறிது சிறிதாக நலிந்து வந்தது. கி.பி.18ஆம் நூற்றாண்டில் தென்னக அரசியலில் வேற்று நாட்டாரது தலையீடும், ஆயுதப்பெருக்கமும், ஏற்பட்டதின் காரணமாக முதலாவது முத்து இராமலிங்க சேதுபதி என்ற பெயருடன் கி.பி.1762 முதல் செம்மையான ஆட்சி செய்த மன்னரை கி.பி.1795ல் ஆங்கிலேயர் சிறைப்பிடித்துத் திருச்சிக் கோட்டையில் அடைத்ததுடுன் சுமார் 400 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தின் கடற்கரைப் பகுதியில் தன்னரசு ஆக விளங்கிய சேதுபதிகளின் ஆட்சியை வரலாற்றிலிருந்து தடுத்து மறைத்து விட்டனர்.' 1. எஸ்.எம். கமால் Dr. - விடுதலைப் போரில் சேதுபதி மன்னர் (1987) - பக்கம்