பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

205 கல்வெட்டுக்கள் நிலக்கொடைகளும், தொடர்ந்து அந்த கிராம மக்கள் நான்கு வேதங்களை கோயில்களில் ஓதுவதற்கு தொடர்ந்து அவைகளை பிறருக்கும், ஒதுவிக்க உதவுவதற்காகவும் சதுர்வேதி மங்கலம் என்ற நிலக்கொடைகளையும் சேதுமன்னர்கள் வழங்கி வந்துள்ளனர். மேலும் சிறு சிறு பணிகளில் கிராம மக்களுக்கு உதவி செய்யும் பொருட்டு சேதுபதி மன்னர்கள் கிராம மக்களின் ஒரு சிலருக்குப் பல சுவந்திரங்கள் (சலுகைகள்) வழங்கி இருந்தனர் என்பதைக் குறிப்பாக கி.பி.1669இல் திருமெய்யம் அழகிய மெய்யருக்கு வழங்கியதான சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சுவந்திரங்கள் பற்றிய விவரங்களை இராமநாதபுரம் சமஸ்தான மேனுவலில் வரையப்பட்டுள்ளன. அதாவது குடைவிருத்தி (திருவிழாக் காலங்களில் பவனி வரும் சுவாமி அம்பாளுக்கு முன்னால் கோயில் குடையின் கீழ் சென்று விழாவை நடத்தி வைப்பவர்). எல்லை விருத்தி (கிராம மக்களிடையே அவர்களதுநிலங்களுக்கான எல்லைத் தகராறுகளைத் தீர்த்து வைப்பவர்) மடைக்கிடை முக்கந்தர் (வருஷத்தில் முதன்முறையாக கண்மாய் நீரை மடை வழியாக நிலங்களுக்கு விடுவதற்கு முன்னர் கடவுள் வழிபாடு நடத்தி ஆட்டுக் கிடாவை பலியிட உதவுபவர்) நாட்டுக் கணக்கு போன்றவைகள். இவ்ை போன்று ஆன்மீகப் பணிகளின் வளர்ச்சிக்காக ஏராளமான அறக்கொடைகளைச் சேதுபதி மன்னர்கள் வழங்கி உள்ளனர். திருக்கோயில்களில் 5 அல்லது ஆறு கால பூஜை வழிபாடுகள் திருமஞ்சனம், திருமாலை, நிவேதனம் ஆகிய அன்றாடச் சேவைகளுக்கும் திருநாட்களில் நடைபெறும் சிறப்புக் கட்டளைகளுக்கும் மற்றும் சித்திரை, மாசி, ஆவணி புரட்டாசி, தை, பங்குனி ஆகிய மாதங்களில் நடைபெறும். திருவிழாக்களுக்கும் பல்லக்கு சேவைகளுக்கும் ஏராளமான ஊர்களை சர்வ மான்யமாக திருக்கோயில்கள், திருமடங்கள், அன்ன சத்திரங்கள், பள்ளிவாசல்கள் தேவாலயங்கள் ஆகிய நிறுவனங்களுக்கு அளித்துள்ளனர்.