பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

PO / கல்வெட்டுக்கள் == == போற்றி வந்த பொழுதிலும் கி.பி.17ம் நூற்றாண்டின் தொடக்கம் இந்த இறை வழிபாட்டில் சிறு தெய்வ வழிபாடும் சிறப்பான இடத்தைப் பெற்றதை அறிகின்றோம். முதலாவதாக சைவ சமயத்தின் புராணக் கதைகளின் படி துவக்கம் பெற்றவர் சிவபெருமானுக்கம் மகாவிஷ்ணுவிற்கும் மைந்தனாக பிறந்தவர் அரிஹர புத்திரன் என வழங்கப்பட்டவர் ஆகும். இவரை பொதுமக்கள் சாஸ்தா என்றும் சாத்தன் என்றும் ஐய்யனார் என்றும் அழைத்து வரலாயினர். அதுவரை தங்களது ஊர்களுக்கு ஏற்படுகின்ற நோய் நொடிகளை தீர்க்கும் சிறு கடவுள்களாக வழிபட்டு வந்த கருப்பன், கருப்பணசாமி, கருப்பு, முனியன், முனியசாமி ஆகிய சிறு தெய்வங்களை கைவிட்டுவிட்டு ஐய்யனாரை ஊர்கள் தோறும் தங்களது காவல் தெய்வமாக கொண்டாடத் தொடங்கினர். சேது நாட்டின் பெரும்பாலான கிராமங்களில் ஐய்யனாருக்கு சிறு ஆலயங்களும் அமைக்கப்பட்டன. அங்கு நிறுவப்பட்ட ஐய்யனார் திருவுருவங்கள் நிற்கும் நிலையிலும், அமர்ந்த நிலையிலும், அவரது இரு மனைவிகளான பூரணை, புஸ்கலை உடனும், யானை குதிரை ஆகிய பரிவார சிலைகளுடனும் காணப்படுகின்றன. ஆண்டுதோறும் இந்தக் காவல் தெய்வங்களுக்கு பொதுமக்கள் எடுக்கும் விழா "துரவி எடுப்பு" என அழைக்கப்படுகிறது. இந்த விழா காலத்தில் பொது மக்களது நேர்த்திகளாக சுடுமண்ணால் செய்யப்பட்ட குதிரைகளை தாரை, தப்பட்டை ஒலிகளுடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அந்தந்த கோயில்களில் ஐய்யனார்க்கு சேர்க்கப்படுகின்றன. இந்த ஐய்யனார்க்கு வழிபாடுசெய்ப்வர்கள் மண்பாண்டங்களை செய்யும் குழால வேளாளர் என்றும் குயவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. இது தவிர பழந்தமிழர் விர விளையாட்டில் ஒன்றான ஏறு தழுவுதல், எருது கட்டு விழாவும் நடைபெற்று வருகின்றன. பொதுமக்களது பக்தி உணர்வையும், மகிழ்ச்சியையும்