பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

209 கல்வெட் டுக்கள் — அறக்கொடைகள் வழங்கியதை அவரது செப்பேடுகள் தெரிவிக்கின்றன. இந்தக் கல்வெட்டுக்கள் அனைத்தும் சேதுபதி மன்னர்களது ஆட்சித் திறனையும், ஆன்மீக உணர்வுகளுக்கு அவர்கள் அளித்த முன் உரிமையினையும், சமுதாய பணிகளின் பால் அவர்கள் கொண்டிருந்த அக்கறையையும், காலமெல்லாம் எடுத்துச் சொல்லும், வரலாற்றுத் தடையங்களாக அமைந்துள்ளன. தமிழக வரலாற்றின் ஒரு பகுதியாக விளங்கும் இந்தக் கல்வெட்டுக்களும், ஏனைய மன்னர்களது கல்வெட்டுக்களைப் போன்று தமிழக வரலாற்றில் வகைப்படுத்தி, வரிசைப்படுத்தி ஆய்வு செய்வதற்கு பயனுள்ள ஆவணங்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. காலப்போக்கில் இந்த மன்னர்களது கல்வெட்டுக்கள் மேலும் பல ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டால் அவையும், தமிழக வரலாற்றிற்குப் பல புதிய செய்திகளை அளிக்கும் என்பதில் ஐயமில்லை.