பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 சேதுபதி மன்னர் எழுத்தெல்லாம் என்ற வள்ளுவத்தின் தொடர் இங்கு நோக்கத்தக்கது. சைகேடு : நல்ல தமிழ்ச்சொல். இசை என்பது இயற்றப்படும் காரியங்களுக்கு பயனாக ஏற்படுவது புகழ் அல்லது இசை எனப்படும். இதற்கு ஊறு ஏற்படும் வகையில் செய்யப்படும் அவச்செயல் அல்லது இழிவு இசைகேடு எனப்பட்டது. зынкв»вышта : கங்கை நதியில் நீராடி புனிதம் பெற்றவர்கள் இந்தப் பெயரால் வழங்கப்பட்டனர். வேறு எங்கும் காணப்படாத இந்தச் சொல் கி.பி.17ம் நூற்றாண்டு புதுக்கோட்டை கல்வெட்டுக்களில் மட்டும் காணப்படுகிறது. இன்று சிலர் தங்களது இயற்பெயருக்கு முன்னால் காசி ரீ என்ற அடைமொழியை சேர்த்துக் கொள்வது இங்கு குறிப்பிடத்தக்கது. கர்ப்பாஜி : இந்த அடைமொழி இராமநாதபுரத்தை தலைமை இடமாகக் கொண்டு சிறப்பாக செங்கோலோச்சிய ரெகுநாத திருமலை சேதுபதியை (கி.பி.1645-1876) குறிப்பதாகும். இந்த மன்னர் இராமேஸ்வரம் திருக்கோயிலில் இரண்ய கர்ப்பம் என்ற தானத்தை நிறைவேற்றியதற்காக இந்த மன்னர் இரண்ய கர்ப்பயாஜி எனறு வழங்கப்பட்டார். இவருக்கு அடுத்து வந்த சேதுமன்னர்களும் இந்தச் சொல்லை தங்களது விருதாவளியுடன் இணைத்து செப்பேடுகளிலும் கல்வெட்டுக்களிலும் பயன்படுத்தியுள்ளனர். பொன்னால் செய்த பக மாட்டினை அந்தணர்களுக்கு தானம் செய்யும் இந்த வகையான அறச்செயலை திருமலை ரெகுநாத சேதுபதிக்கு முன்னர் தஞ்சை மன்னர்ரெகுநாத நாயக்கர் செய்ததாக வரலாற்றுச் செய்தி ஒன்று