பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 சேதுபதி மன்னர் அதனையடுத்த நூற்றாண்டுகளில் இத்தகைய ஆடல்குட்டிகளுக்கு கணிகை என்ற பெயர் ஏற்பட்டது. இளங்கோவடிகளது சிலப்பதிகார மாதவி இந்தச் சொல்லுக்கு ஏற்ற எடுத்துக்காட்டாகும். இத்தகைய மகளிரை தஞ்சை இராஜராஜ சோழன் தான் அமைத்த பல சிவாலயங்களில் அர்ச்சகர்களுக்கு கோயில் வழிபாட்டில் உதவுவதற்காக ஏற்படுத்தினார். இவர்களுக்கு வீடுகளும் ஜீவித காணிகள் வழங்கப்பட்டதை தஞ்சை பெருஉடையார் கோயில் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. அப்பொழுது இவர்கள் தேவரடியார் எனப்பட்டனர். பின்னர் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் இந்த மக்கள் பிரிவினரை கோயில்கள் சரியான முறையில் பராமரிக்கத் தவறியதால் இவர்கள் பொது மகளிராக நடத்தப்பட்டனர். வாழ்க்கை வசதிகள் அற்ற இந்தப் பெண் மக்கள் திருக்கோயில்களில் தெய்வங்களுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டு வாழ்ந்து வந்தனர். நித்ய சுமங்கலி என்றும் ருத்ரகன்னிகை என்ற பெயர்களால் அழைக்கப்பட்டு வந்த இவர்களை புதுக்கோட்டை விரையாச்சிலைக் கல்வெட்டு தாசிகள் என குறித்துள்ளது. தாசி என்ற வடமொழிச் சொல்லுக்கு அடிமை அல்லது பணிப்பெண் என்பது பொருளாகும். 圍 தமிழ்நாட்டு கிராமங்களில் நிலங்கள் - விளை நிலங்கள் நஞ்சை புஞ்சை கழனி எனவும் விவசாயத்திற்கு பயன்படாத நிலங்கள் தரிசு எனவும் மற்றும் பொது உபயோகத்திற்கு உள்ள நிலங்கள் மந்தை அல்லது புறம்போக்கு எனவும் பாகுபாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டது. இந்த வகையில் கிராமங்களில் மக்கள் குடியிருப்புக்கென பிரித்து பாகுபாடு செய்யப்பட்ட இடம் நத்தம் ஆகும். நத்துதல் என்றால் விரும்புதல் மக்கள் தங்களுக்கு ஏற்ற இடமாக விரும்பி வந்து (நத்தி வந்து) குடியிருப்புக்களை அமைத்த இடம் நத்தம் ஆகும்.