பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 == சேதுபதி மன்னர் பாராட்டப்பட்டனர் என்பது வரலாறு. மற்றும் சேதுபதி மன்னர்கள் தமிழ்ப் புலவர்களையும், தமிழகக் கலைஞர்களையும், அவர்களது தகுதியையும், திறமையையும், உணர்ந்து பரிசுகள் வழங்கியதைப்போல தமிழ் மொழியிலும், தமிழ் இசையிலும், சேதுபதி மன்னர்களே சிறந்து விளங்கினர் என்பது வியப்பிற்குரிய செய்தியாகும். திருமலை ரெகுநாத சேதுபதி மன்னர் சங்கீதத்திலும், நாட்டியத்திலும் சிறந்து விளங்கியமைக்காக சங்கீத, நாடக நாட்டிய பிரவீணன் என்ற பட்டத்தையும் கிழவன் ரெகுநாத சேதுபதி இசைப் பிரியராக இருந்தமைக்காக சங்கீத சாகித்ய வித்யா வினோதன் என்ற விருதுடன் போற்றப்பட்டார். சுமார் 48 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து முடிந்த முதலாவது முத்துஇராமலிங்க சேதுபதி மன்னர் மேலைநாட்டு இசையில் பெரு விருப்புக் கொண்டு அவரது அரசவையில் வயலின் வித்துவான் ஒருவரை அமர்த்தி இருந்தார் என்பதை ஆங்கிலேயரது ஆவணம் ஒன்று குறிப்பிடுகிறது. இரண்டாவது முத்துராமலிங்க சேதுபதி என்று போற்றப்பட்ட முத்தமிழ்ப் புலவராக, வடமொழி, தென்மொழி, இலக்கண, இலக்கியங்களை முழுவதும் உணர்ந்த வித்தகராக வாழ்ந்ததுடன் தமிழ் இசையிலும், இந்துஸ்தானி இசையிலும், மிகச் சிறந்து விளங்கிய புலவராவார். இவரது தமிழ் இசைப் பாடல்களின் தொகுப்பு காயகப்பிரியா என்றும், இந்துஸ்தானி இசைப்பாடல் சாகித்யங்கள் ரசிக ரஞ்சனம் என்ற தொகுப்பாகவும், வள்ளி மணமாலை, சரச சல்லாப மாலை, பால போதம், நீதி போதம், சடாக்கர பதிகம் என்ற தலைப்புக்களில் வெளியிடப்பட்டுள்ளன. நிமிக கவியாக விளங்கிய இந்த மன்னர் 32 ஆண்டுகளே வாழ்ந்த போதும் ஏராளமான தனிப் பாடல்களையும் இயற்றியுள்ளார். இவரது குமாரரான மன்னர் பாஸ்கர சேதுபதி அவர்கள் ஆங்கிலத்திலும், வடமொழியிலும், தமிழிலும் மிகத்தேர்ந்த புலவராக விளங்கினார். திருக்கோயில்களுக்குச் செல்லும் பொழுது அங்குள்ள இறைவர் மீது பதிகம் பாடுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்த மன்னரது இளவலான ராஜா தினகர், சமஸ்கிருதத்திலும்,