பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- Lவெ - டுக் **m = - இயல் 3 கல்வெட்டுக்கள் வரலாறு தமிழகத்தில் சுமார் 150 வருட காலமாக காகிதமும் அச்சு இயந்திரமும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. அச்சு இயந்திரத்தை கி.பி.16ஆம் நூற்றாண்டில் போர்ச்சுக் கீசியரும் கி.பி.18ஆம் நூற்றாண்டில் ஜெர்மன் நாட்டுப் பாதிரியார் சீசன் பால்கும், ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியாரும் தமிழ்நாட்டிற்கு அறிமுகப்படுத்தினர். ஆனாலும் அச்சு இயந்திரங்கள் கிறிஸ்தவ வேத ஆகமங்களை வெளியிடுவதற்கும். பின்னர் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியாரின் அரசு இதழ்களை அச்சிடுவதற்கும் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. கடைச்சங்ககாலத்தில் இருந்து 18ஆம் நூற்றாண்டு வரையான கால இடைவெளியில் தமிழகத்தின் அரசியலை நடத்தி வந்த சேர, சோழ பாண்டியர்களும், பல்லவர்களும், நாயக்க மன்னர்களும் சேதுபதி மன்ன்ர்களும் தங்களது அரசு ஆணைகளையும், கொடைகளையும்,