பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 == - =சேதுபதி மன்னர் அறிவிப்பதற்குக் கல்லையும், செம்பையும் பயன்படுத்தினர். காலத்தால் அழியாதுநின்று மக்களுக்கு அவை வரலாற்று ஆவணங்களாக விளங்க வேண்டும் என்பதே அவர்களது குறிக்கோள். அதனால் தங்களது அரசு ஆணைகளையும், தீர்ப்புரைகளையும் தானசாசனங்களையும், கல்லிலும், செம்பிலும் வெட்டி வைத்தனர். இவை முறையே கல்வெட்டுக்கள் என்றும் செப்புப் பட்டையங்கள் அல்லது செப்பேடுகள் என்றும் வழங்கப்பட்டன. கல்வெட்டுக்கள் பெரும்பாலும் நாட்டின் பொது இடங்களான திருக்கோயில்கள் திருமடங்கள், சத்திரங்கள் மற்றும் பொது மக்கள் கூடுகின்ற அங்காடிகள், தண்ணிப்புறவுகள் போன்ற இடங்களில் கல்லில் பொறிக்கப்பட்டன. செப்பேடுகள் இரண்டு பிரிவுகளாகச் செப்புத் தகடுகளில் பொறிக்கப்பட்டும் ஒன்று அதனை வழங்கிய மன்னரிடமும், மற்றொன்று அதன் தானத்தை பெற்றுக் கொண்ட அந்தணர் புலவரிடமும், மடாதிபதிகளிடமும் இருந்து வந்தன. கல்வெட்டுக்களில் மூன்று வகையான செயல்களை பொறிக்கும் படி செய்தனர். முதலாவது மன்னரது வீரம், படையெடுப்பு, வெற்றி, போன்றவைகளைக் குறிப்பனவாகும். இவை மெய்க்கீர்த்தி எனப்படும். பிறிதொரு வகையில் நாட்டு மக்களின் நலனைக் கருதி வெளியிடப்படும் பல வகை ஆணைகளைக் கொண்ட கல்வெட்டுக்களாகும். இன்னொரு வகை கோயில்களில் நிர்வாகியாகவும், மன்றங்களில் வழக்குகளின்பேரில் நியாயம் வழங்கும் நடுவராக இருந்த பிறப்பிக்க தீர்ப்புரைகளாகும். இந்த மூன்று வகையான கல்வெட்டுக்களும் இன்றைக்கு நமது கடந்த கால அரசியல், சமுதாய சமூகநிலைகளின் வளர்ச்சிகளைப் பற்றி அறிந்துகொள்வதற்கு ஏதுவாக அமைந்துள்ள வரலாற்றுச்சான்றுகளாக விளங்கி வருகின்றன. _ கோநகரில் அரசுக் கட்டிலில் அமர்ந்து மன்னர் ஆட்சி செய்தாலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வந்த ஊர்ச்சபைகளும், கோயில் தர்மகர்த்தா குழுக்களுமே உண்மையான