பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ՅՅ கல்வெட்டுக்கள்= - - நிர்வாகத்தை இயக்கி வந்தனர் என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த ஊர்ச்சபைகளும் கோயில் குழுக்களும், குறிப்பிட்ட நாட்களில் ஒருசேர அமர்ந்து ஊர்ப் பிரச்சினைகளைக் கலந்து பேசி நல்ல முடிவுகளைச் செய்தனர். அவை ஊரின் நலனையும், கோயில் நலனையும், உட்பொருளாகக் கொண்டு இருந்ததால் அந்த அவைகளின் தீர்ப்பு உரைகள் ஆங்காங்கு திருக்கோயில்களின் சுவர்களில் பொறிக்கப்பட்டன. இத்தகைய கல்வெட்டுக்கள் அன்றைய வழக்கிலிருந்த தமிழ் பிராமி எழுத்து வடிவிலும், வட்டெழுத்திலும் பின்னர் கரந்த எழுத்திலும் இன்றைய தமிழ் வரிவடிவிலும் பொறிக்கப்பட்டு வந்தன. இந்தக் கல்வெட்டுக்களில் வாசக வரி வடிவங்களிலிருந்து நமது தமிழ் மொழியின் மூல மொழியான தாமிழி என்றதொரு வடிவில் அமைந்து பின்னர் பிராமி, தமிழ் பிராமி, வட்டெழுத்து எனகால வேறுபாடுகளினால் மொழியின் வரி வடிவ வளாச்சியினை அறிந்து கொள்வதற்கு உதவுகின்றன. பிராமி எழுத்துக்களாக கல்வெட்டுக்கள் கி.மு.இரண்டாம் நூற்றாண்டு முதல் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு ஆகிய காலத்தைச் சார்ந்தவை. வட்டெழுத்துக்கள் கி.பி.10ஆம் நூற்றாண்டு வரை பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. குறிப்பாகப் பாண்டிய நாட்டில் தான் இந்த வட்டெழுத்துக் கல்வெட்டுக்கள் மிகுதியாக கிடைத்துள்ளன. தொண்டை நாட்டு, கொங்கு நாட்டு நடுகற்களிலும் இவை காணப்படுகின்றன. சமஸ்கிருத மொழியில் பொறிக்கப்பட்ட சில கல்வெட்டுக்களும் கிடைத்துள்ளன. இவைகளில் சிறப்பானவை எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்த மாறன் சடையன் என்ற பாண்டிய மன்னரது காலத்தவை. திருப்பத்துர் திருக்கோயிலில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்களில் இன்றைய தமிழ் மொழியுடன் சமஸ்கிருதச் சொற்கள் கலந்த கிரந்த எழுத்துக்கள் என்ற வகையான கல்வெட்டுக்களாக அவை காணப்படுகின்றன. இன்று கிடைத்துள்ள தமிழ்க் கல்வெட்டுக்களில் மிகவும் பழமையானது, இராமநாதபுரம்_மாவட்டம் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள பூலாங்குறிச்சிக் குன்றில் பொறிக்கப்பட்டுள்ள கி.பி.6ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த தமிழ்க் கல்வெட்டுக்களாகும். இதனை ஒத்த தொன்மையான -