பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 - - சேதுபதி மன்னர் செப்பேடு எனக் கருதப்படுவது பராந்தக சோழன் கி.பி.10ஆம் நூற்றாண்டில திருத்தணிகை சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு வழங்கிய தான சாசனமான திருவேளஞ்சேரி செப்பேடு ஆகும். இந்தச் செப்பேட்டின் ஒரு பகுதி சமஸ்கிருத மொழியிலும், மறுபகுதி தமிழிலும் பொறிக்கப்பட்டுள்ளது. இதனைப் போன்றே விஜய நகர பேரரசரான கிருஷ்ண தேவராயரது திருமலை திருப்பதிக் கோயில் கல்வெட்டுக்கள் அனைத்தும். தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய மூன்று மொழிகளிலும் பொறிக்கப்பட்டவையாகும். மற்றும் கி.பி.1710ல் தில்லி பேரரசரான முதலாவது பகதூர்ஷா காஞ்சி சாரதா மடத்துக்கு வழங்கிய செப்பேடு தமிழ், சமஸ்கிருதம், பாரசீகம் ஆகிய மொழிகளில் வரையப்பட்டிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.* பொதுவாக மேலே குறிப்பிட்ட செய்திகளிலிருந்து கல்வெட்டுக்களும் செப்பேடுகளும், அந்தந்தக் காலத்தில் தமிழகத்தில் நிலவிய ஆட்சியாளர்கள் விருப்பத்தினையும், அன்று வழக்கில் இருந்த ஆட்சி மொழியையும், சார்ந்தவையாக இருப்பதை அறிந்து கொள்கிறோம். கி.பி.1751 முதல் தென்னகத்தின் ஆட்சியாளராக அமைந்த கர்நாடக நவாப் வாலாஜா முகம்மது அலி அவர்கள் வழங்கியுள்ள சன்னதுகளும், பர்வானாக்களும், அறபு. பார்சி மொழிகளில் வரையப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கி.பி.18ஆம் நூற்றாண்டில் சேதுநாட்டு பெரியபட்டணத்தில் இஸ்லாமிய பெரியவர் ஒருவரது புகழ்ந்துரை அரபு மொழியில் வரையப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.இதனைப் போலவே பெரியபட்டன கிராமத்தில் யூதர்களது மொழியானது ஹிப்ருவில் வரையப்பட்டுள்ள கல்வெட்டு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டு வெளியிடப்பட்டிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இதுவுதைமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஹிப்ரு மொழி கல்வெட்டு இது ஒன்றிே ஆகும். இந்தக் கல்வெட்டுக்களில் ஒரு சிலவற்றை கி.பி.1890-ல் இந்திய 1. Thiruppathy Devasthanam-Thiruppathy Thirumalai inscriptions.Vol-lil 2. Gopi Nath Rao - Copper Plates of Kanchi Sankara Madam. 3. Α.R.Ε. 1944/45