பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் 7 இராமேஸ்வரம் திருக்கோயில் கல்வெட்டு இராமேஸ்வரம் திருக்கோயில் கிழக்குக் கோபுர ஆஞ்சநேயர் கோயில் அருகே இந்தக் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.இதன் காலம் சகாப்தம் 1549 வருடம் ஆவணி மாதம் 16ம் தேதி.இதற்கு சரியான ஆங்கில நாள் 16.08.1627 இதனை வெட்டுவித்தவர் கூத்தன் சேதுபதி ஆவார். திருவிழாக் காலத்தில் இராமநாத சுவாமியை எழுந்தருளிவிக்கச் செய்ய இந்த மண்டபத்தை அமைத்ததாகச் சேதுபதி மன்னர் இந்தக் கல்வெட்டில் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கல்வெட்டில் இந்த மன்னருக்கு ரவிகுலசேகரன் என்ற சிறப்புப் பெயர் குறிக்கப்படுள்ளது. இராமபிரானது சூரியகுலத்தையே சேதுபதி மன்னரும் சார்ந்ததாக குறிப்பதுதான் இந்தச் சிறப்புப் பெயரின் நோக்கமாகும். இந்தக் கல்வெட்டின்