பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

是三 கல்வெட்டுக்கள் இயல் 8 போகலூர்க் கல்வெட்டு இராமநாதபுரம் நகருக்குத் தென்மேற்கே எட்டுக் கல் தொலைவில் உள்ளது போகலூர் என்ற கிராமமாகும். புகலூர் என்ற சொல்லின் திரிபு இந்தப் பெயர். போகலூர் கிராமத்தைத் தலைமையிடமாகக் கொண்டு சேது நாட்டின் ஆட்சியை கி.பி.1603-ல் தொடக்கியவர் உடையான் சடைக்கன் சேதுபதி இவரது நான்கு மக்களில் முதலாமவர் கூத்தன் சேதுபதி ஆவார். இவரது ஆட்சிக் காலத்தில் சேதுநாட்டில் பல சமுதாயப் பணிகளுடன் தெய்வீகத் திருப்பணிகளும் நடைபெற்று வந்திருப்பதை அவரது கல்வெட்டுக்களின் வாயிலாக நாம் அறியமுடிகிறது. இங்குள்ள விநாயகர் கோயிலின் அருகில் உள்ள ஐயனார் கோயிலில் இந்தக் கல்வெட்டு உள்ளது. வாசகத்தின் படி அந்த அய்யனாரின் பெயர் பகழிக் கூத்த ஐயனார் என்பதாகும். இந்த காவல் தெய்வத்தின் பெயர் அந்தக் காலத்தில் அந்த வட்டாரத்தில் மிகவும் பிரபல்யமானதாக இருந்திருக்க வேண்டும். ஏனெனில் இந்த ஊருக்கு வடக்கே பத்து மைல் தொலைவிலுள்ள சன்னாசி சதுர்வேதி மங்கலம்