பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 49 கல்வெட்டுக்கள்= - - - ஆனால் பெரும்பாலான இந்த அமைப்புகளில் சில பகுதிகளில் இணைக்கயல்கள், குரங்கு, தாமரை, மீன் போன்ற சில சின்னங்களும் சில அமைப்புகளில் காணப்படுகின்றன. இவைகளைப் போன்றே சில கோவில்களில் முழக்கோல் சின்னமும் பொறிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சின்னம் ஒன்று இராமேஸ்வரம் திருக்கோவிலின் முதற்பிரகாரத்தில் மேற்குச் சுவரின் விநாயகர் கோவிலுக்குத் தென்பகுதிக்கு எதிராக இரண்டாவது பிரகாரத்தை நோக்கியவாறு சுவரில் இந்த சிற்பம் காணப்படுகிறது. இதனை பொறிக்கச் செய்தவர் யார் என்பது போன்ற விவரங்கள் அங்கு காணப்படவில்லை. பெரும்பாலும் முற்காலங்களில் நடைமுறையில் இருந்த நீட்டல் அளவு, நிறுத்தல் அளவு, முகத்தல் அளவு பற்றிய விவரங்கள் அறியத்தக்கனவாக இல்லை. ஆனால் நமது நாடு விடுதலை அடைவதற்கு முன்னர் வரை சேதுபதிகளது சீமையில் நீட்டல் அளவாக அங்குலம், அடி முழம் (1', அடி) கஜம் (3அடி) குறுக்கம் (90 செண்ட்) என்ற நீட்டல் அளவைகள் இருந்து வந்துள்ளன. இந்த அளவைகளின் அடிப்படையில் நிலங்களை அளப்பதற்கு குலப்பிரமாணம் என்ற ஒருமுறை ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டதாக தெரியவருகிறது.' இந்த நிலஅளவையை மாகாணிக்கோல் என்ற மரக்கோலால் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்தக் கோலினால் அளக்கப்பட்ட ஒரு கோலுக்கு சதுரஅளவு நிலம், ஒரு மரக்கால் விரையடி என்றும். இதனை ஒத்த பதினான்கு கோல் பரப்பு ஒரு கலவிரையடிஎனவும் வழங்கப்பட்டு வந்தது. இப்பொழுது நடைமுறையில் உள்ள ஹெஸ். மீட்டர், ஹெக்டார் என்ற நிலஅளவுகளுக்கு முன்னர் அமுலில் இருந்த செண்ட், ஏக்கர் என்ற அளவையில் இந்த மாகாணிக்கோலின் 83/16 பரப்பு அளவு ஒரு செண்ட் நிலமாக கணக்கிடப்பட்டு வந்தது. இந்த மாகாணிக்கோலின் நீட்டல் அளவு இராமேஸ்வரகோவிலில் பொறிக்கப்பட்டிருக்கும் இந்த முழக்கோலின் அளவு பெரும்பாலும் நான்கு அடி அளவுள்ளதாக இருந்திருக்க வேண்டும் 1. James Burges - Archealogical Survey of India Vol IV (1881).