பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5C) == சேதுபதி மன்னர் என்று அறுதியிடுவது பொருத்தமானதாக இருக்கலாம். மேலும் இராமேஸ்வரம் திருக்கோவிலின் முதற்பிரகாரத்தை அமைத்த கூத்தன் சேதுபதிமன்னர் (கி.பி.1622-1636) என்பவர் இந்த முழக்கோல் கோவிலின் சிற்பத்தை பொறித்திருக்கவேண்டும் என நம்பப்படுகிறது. காரணம் இந்த முழக்கோல் சிற்பம் இந்தக் கோவிலின் முதற்பிரகார சுவரில் பொறிக்கப்பட்டிருப்பது இதற்கு தக்க சான்றாக அமைந்து விளங்குகிறது. போக்குவரத்து வசதிகளும், செய்திப் போக்குவரத்தும் வளர்ச்சி பெறாத சேதுபதி மன்னர்களது ஆட்சியில் இத்தகைய முழக்கோல் ஒன்றினை மக்களின் நடமாட்டம் மிகுந்த கோவிலில் அமைந்து இருந்ததால் இது பெரும்பாலோருக்கும் பயன்படும் என்ற நோக்கில் இந்த முழக்கோல் சிற்பம் பொறிக்கப்பட்டுள்ளது. சேதுபதி மன்னர்களிடையே இறுதி மன்னராக விளங்கிய முத்து இராமலிங்கவிஜயரகுநாத சேதுபதியின்ஆட்சியில் (கி.பி.1762-1795) அவருக்கு தக்க துண்ைவராக விளங்கிய பிரதாணி முத்து இருளப்ப பிள்ளை என்பவர் சேதுபதி சீமையின் நிலச்சீர்திருத்தத்திற்குக் காரணமாக இருந்ததுடன் அன்றைய நில அளவைக்கு உதவுவதற்காக அவரது நீண்டகாலின் கட்டை பெருவிரல் முதல் குதிகால் வரையான 12 அங்குல நீளத்தை அடிப்படையாக கொண்ட முழக்கோல் ஒன்றினை அமுல்படுத்தினார் என்று சேதுபதி மன்னர்களது ஆவணங்களிலிருந்து தெரியவருகிறது. இந்தக் கோவிலின் சரியான நீட்டல் அளவினைக் கொண்ட முழக்கோல் உருவம் ஒன்றினை பிரதாணி முத்து இருளப்பபிள்ளை (கி.பி. 1783-1791) முதுகுளத்தூர் வட்டம், கடுகு சந்தை சத்திரத்தில்ஒரு கல்லில் பொறித்து வைத்தார் என்றும் அறிய முடிகிறது. ஆனால் அந்த முழக்கோல் கல் இப்பொழுது அந்தச் சத்திரத்தில் காணப்படவில்லை. மேலும் இந்த முழக்கோல் என்ற சொல்லிலிருந்து இந்த கோல்