பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51 கல்வெட்டுக்கள் நீட்டல் அளவைக்கு பயன்படுத்தப்பட்டது என்பது தெரிய வருகிறது. முழம் என்பதற்கு 1 1/2 அடி நீளம் என்ற பொருள் இந்த சொல்லுக்குப் பொருந்தாது காரணம் இராமேஸ்வரம் திருக்கோவிலின் புடைப்புச் சித்திரமான முழக்கோல் சுமார் 4 அடிக்கும் மிகுதியான நீளமுடையதாக காணப்படுகிறது. உண்பது நாழி உடுப்பது நான்கு முழம் என்று இந்தப் பகுதியில் வழங்கப்படும் வழக்கும் இந்த முழக்கோலின் நீளத்திற்கு பொருந்தாதது ஆகும். அத்துடன் தற்பொழுது தமிழ்நாட்டில் வீட்டுமனைகளின் மதிப்பு மிகவும் அதிகமான தொகையில் நிர்ணயிக்கப்படும் முக்கியமான ஊர்களில் ஒன்றான கீழக்கரையில் இன்றும் வீட்டுமனை நிலங்களை அளந்து மதிப்பிடுவதற்கு 60 அங்குல நீளமுள்ள மரக்கோலால் ஆன முழக்கோல் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. சிலர் இவ்வாறு கோயிலில் பொறிக்கப்பட்டுள்ள அளவுகோல்களை அக்கோயில் அல்லது கட்டுமானப் பகுதியை அமைக்கப்பயன்பட்ட "தச்சுமுழம்" என்றும் கூறுவர். தச்சுமுழம் என்ற கோலைப் பயன்படுத்தி அக்கோயில் அமைக்கப்பட்டது என்பர். தச்சுமுழம் - கோயில் கல் தச்சர்கள் பயன்படுத்திய அளவுகோல் எனப் பொருள்படும். ஒவ்வொரு கோயிலுக்கும் தச்சுமுழம் தனித்தனியாக உண்டு என்பர்." புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு