பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

F;1 கல்வெட்டுக்கள்= - - l இயல் 12 | கீழக்கரை சொக்கநாதர் கோயில் கல்வெட்டு இரண்டாம் சடைக்கண் சேதுபதி என்ற தளவாய் சேதுபதி ஆண்வாரிசு இல்லாமல் கி.பி.1645-ல் இறந்துவிட்டார். இதனால இறந்த மன்னரது தங்கையின் மகனான திருமலை ரகுநாதத் தேவர் சேதுபதி மன்னாரானார். இவரது ஆட்சியின் தொடக்கத்தில் சேதுபதி மன்னரது சரியான வாரிசு யார் என்பது பற்றிய குழப்பம் எழுந்தது. கூத்தன் சேதுபதியின் இரண்டாவது மனைவியின் மகனும் மறவர் சாதி பெண்ணுக்குப் பிறக்காதவருமான, தம்பித் தேவர் என்பவர் மதுரை திருமலை நாயக்கர் மூலமாக சேதுநாட்டிற்கு உரிமை கோரினார். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாக திருமலை நாயக்க மன்னர் சேதுநாட்டை மூன்று பகுதிகளாகப் பிரிவினை செய்தார். அதன்படி, காளையார்கோவில் பகுதிக்குத் தம்பித் தேவரும், இராமநாதபுரத்தில் திருமலை ரெகுநாத தேவரும் இவரது தமயனார்