பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 = - - சேதுபதி மன்னர் நாராயணத் தேவரது மகன், தனுக்காத்த தேவரு. அஞ்சுக்கோட்டையில் அஞ்சு கோட்டைப் பகுதிக்கும் அரசர்களாயினர். இந்தப் பிரிவினை ஏற்பட்ட சில வருடங்களுக்குப் பின்னர் காளையார் கோவிலில் தம்பித் தேவரும் அஞ்சு கோட்டையில் தனுக்காத்த தேவரும் காலமாகிவிட்டதால் பிரிவினை பெற்ற சேதுநாடு மீண்டும் ஒன்று சேர்ந்து திருமலை ரெகுநாத சேதுபதியின் தலைமையில் வலிவும், பொலிவும் உடைய பெரும் நாடாகத் திகழ்ந்தது. மிகச் சிறந்த போர்வீரரும், போர்களில் தக்க பயிற்சியும், அதற்கான யுக்திகளைக் கையாளுவதில் சமத்தருமான திருமலை ரகுநாத சேதுபதியின் ஆட்சிக்காலம் சேதுபதிச் சீமையில் பொற்காலமாகப் போற்றப்படுகிறது. சேதுபதி மன்னர்களது கல்வெட்டுக்களில் நமக்கு கிடைத்துள்ள மிகுதியான கல்வெட்டுக்கள் இந்த மன்னருடையதாகும். இராமநாதபுரம் வட்டம் கடலோர ஊரான கீழக்கரையின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது சொக்கநாதர் கோயில். இதில் பொறிக்கப்பட்டிருந்த 3 கல்வெட்டுக்களை இந்திய அரசின் தொல்லியல் அளவீட்டுத் துறையினர் கி.பி.1907-ல் படியெடுத்து வெளியிட்டு உள்ளனர். இந்தக் கல்வெட்டு திருமலை ரெகுநாத சேதுபதி மன்னர் இந்தக் கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவர் மீனாட்சி சுந்தரேசுவரருக்கு வழங்கிய நிலக்கொடை பற்றியது. இதன் காலம் கி.பி.1645 என மதிப்பிடப்படுகிறது. - கடலோர நகரமாகிய இந்த ஊர் பல நூற்றாண்டுகளாகச் சேது நாட்டின் சிறந்த துறைமுகப் பட்டிணமாக விளங்கி வந்த பொழுதிலும், இந்த நகரின் தொன்மையைத் தெரிவிக்கக்கூடிய ஆதாரங்களாக மேலே கண்ட கல்வெட்டு மட்டுமே அமைந்துள்ளது. இந்தக் கோயில் சிதிலமடைந்துவிட்டதினால் இப்பொழுது இந்தக் கல்வெட்டு அங்கு காணப்படவில்லை. சேதுபதி மன்னர் இந்தக் கோயிலின் நாள் பூஜைக்காகத்