பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

GB l இயல் 13 | விரையாச் சிலைக் கல்வெட்டு சேதுபதிச் சீமையின் பகுதியாக விளங்கிய கானாட்டில் அமைந்திருப்பது விரையாச்சிலை என்ற ஊராகும். வீரர்களின் சிலை என்பது மருவி விரையாச்சிலை என்றாகியுள்ளது. போரில் இறந்துபட்ட வீரர்களின் நினைவாக சிலைகள் எழுப்பிப் போற்றுவது தமிழகத்தின் சங்க காலம் முதல் இருந்துவந்த வழக்காகும். இத்தகைய வீரர்களுக்கான நினைவுக்கல், நடுக்கல், எனவும் வீரக்கல் எனவும் பின்னர் வழங்கப்பட்டது. இதனைப் போன்ற நடு கல் ஒன்று முன்னர் இங்கு அமைந்திருக்க வேண்டும். இந்த ஊர் இப்பொழுது புதுக்கோட்டை மாவட்டம் திருமெய்யம் வட்டத்தில் அமைந்துள்ளது. இந்தப் பகுதி திருமலை சேதுபதியின் ஆட்சியில் கள்ளர் சீமை என்ற பெரும் பகுதியில் இந்த ஊர் அமைந்திருந்ததாகத் தெரியவருகிறது. இங்குள்ள உலகவிடங்கேஸ்வரர்