பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 கல்வெட்டுக்கள்= - - - சுவாமி கோயிலுக்குத் திருமலை சேதுபதி மன்னர் சார்பாக வழங்கப்பட்ட நிலக்கொடைச் செய்தியினை கல்வெட்டின் வாசகம் தெரிவிக்கின்றது. இந்த ஆணையைத் திருமலை ரெகுநாத சேதுபதி மன்னருக்காக அவரது பிரதான அலுவலரான சொக்கப்பன் சேர்வைக்காரர் என்பவர் வழங்கியுள்ளார். இந்த அலுவலர் சேதுபதி மன்னரது மிக முக்கியமான அலுவலர் என்பது அவர் வழங்கியுள்ள பிற ஆவணங்களில் இருந்தும் தெரியவருகிறது. இந்த அலுவலர் கி.பி.1668ல் இராமேஸ்வரம் திருக்கோயிலுக்காக சேதுபதி மன்னரது சிறப்பான அலுவலர் என்ற முறையில் இராமேஸ்வரம் திருக்கோயிலுக்கு திருவாடானை வட்டம் ஆனந்துர், பாப்பாகுடி ஆகிய ஊர்களைச் சர்வ மான்யமாக இவர் வழங்கிய செப்பேட்டினை ஏற்கனவே வெளியிடப்பட்டு இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. சிறப்பான நாட்களில் சுவாமியையும், அம்பாளையும் பல்லக்கில் வைத்து அலங்கரித்துக் கோயில் திருச்சுற்றிலும், ஊரின் பிரதான வீதிகளிலும் உலா வருவதைப் பல்லக்குச்சோவை என இந்தக் கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது. சேவை என்ற வடமொழிச் சொல் இங்கு தமிழில் சேர்வை என குறிப்பிடப்படுகிறது. பிராமண போசனம் என்பது திருவிழாக் காலங்களில் பிராமணர்களுக்கு அளிக்கப்படும் சிறப்பான விருந்து. முந்தைய சமுதாயத்தில் மக்கள் இறைவனுக்கு அடுத்தபடியாக கல்வி கேள்வியிலும் வேத வியாகரணங்களிலும் சிறப்புற்று விளங்கியவர்கள் பிராமணர். ஆகையினால் பிற சாதியினரை விட பிராமணர்கள் சிறப்பாகப் போற்றப்பட்டுகோயில் விழாக்களின் பொழுது அவர்களுக்கு முன்னுரிமையும், விருந்து உணவும் வழங்கப்பட்டு வந்தது. தேவதாயம் (அ) தேவதானம் என்ற சொல் திருக்கோயில்களுக்குத் தானமாக வழங்கப்படும் காணிகளைக்