பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

טז சேதுபதி மன்னர் குறிப்பதாகும். இதனைப் போன்றே பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட நிலங்கள் பிரம்மதேயம் எனவும் சோழ பாண்டியர்களது கல்வெட்டுகளில் காணப்படுகின்றது. இந்தக் கல்வெட்டில் குடிநீங்காத் தேவதானம் என்ற சொல் புதிதாகப் புகுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே குடிகள் வாழ்ந்து வருகின்ற ஊரினை மன்னர் கோயிலுக்குத் தானமாக வழங்கும்பொழுது அந்த ஊர்களில் தொன்றுதொட்டு குடியிருந்து வரும் குடிகளது குடியிருப்பு உரிமைக்குக் குந்தகம் ஏற்படாது இருக்கும் வண்ணம் குடிகள் அந்த ஊர்களில் குடியிருந்து வரும் உரிமையை மதித்துக் கட்டளையிடப்படுவதுதான் இந்த குடிநீங்காத் தேவதானம் என்ற சொல்லுக்கு உரிய பொருளாகும். மேலும் இந்தக் கல்வெட்டின் ஐந்தாவது வரியில் கல்போட்டுக் கொடுத்து என்ற சொல் பயன்படுத்தப்பட்டு இருப்பது நோக்கத்தக்கது. ஒரு காணி அல்லது ஊரினை முழுமையாகக் கோயிலுக்குத் தானமாக வழங்கும்பொழுது அந்த நிலப் பகுதியின் பெரு நான்கு எல்லைகளையும் முழுமையாக அளவை செய்து அறுதியிட்டு அதற்கான எல்லைக் கல்லை நாட்டிக் கொடுப்பதுதான் இந்தச் சொல்லின் பொருளாகும். தானம் கொடுக்கப்படும் ஊர்களின் நான்கு பெரும் எல்லையைக் குறிப்பதற்காகத் தானம் பெறுகின்ற திருக்கோயில் சிவன் கோயிலாக இருந்தால் அந்த எல்லையில் சூலக் கல்லையும் (சிவபெருமானது சூலம் உருவம் பொறிக்கப்பட்ட கல்) வைணவத் திருக்கோயிலாக இருந்தால் திரு ஆழிக்கல் (மகாவிஷ்ணுவினது சக்கரத்தின் உருவம் பொறிக்கப்பட்ட கல்) நாட்டி வைப்பது வழக்கம். இத்தகைய எல்லைகளைத் தெளிவாக அறுதியிட்டுக் காண்பிப்பதற்காக ஆங்காங்கு கிராமங்களில் எல்லை விருத்தி என்ற அலுவலர் சேதுபதிகளின் ஆட்சியில் இருந்ததை இராமநாதபுரம் சமஸ்தானம் மேன்யுவல் தெரிவிக்கின்றது.' இங்கே வீரகண்டன்பட்டி எல்லையில் சூலக்கல் நாட்டி இருக்க வேண்டும் என்பது தெரியவருகிறது. இந்த கல்வெட்டிற்கான வாசகத்தைச் சேதுபதி மன்னர் பிரதிநிதி 1. Raja Ram Rao Manual Of Ramnad Samasthanam (1891) Page