பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 = = சேதுபதி மன்னர் 4. சொக்கப்பன் சேருவைகாறன் கட்டளையிட்டது. விரகண்டன்பட்டி நஞ்சை புஞ்சை குடிநீங்கா தேவ 5. தானமாக கட்டளையிட்டபடியிநாலே இந்தபடி கல்லிலும் செம்பிலும் வெட்டி கல்போட்டு குடுத்தபடி 6. யினாலே சந்திராதித்தவரைக்கும் யனுபவித்துக் கொண்டு பல்லக்கு சேர்வையும் பிராமணர் போசனம் 7. மும் திருப்பணியும் நடத்திவரக் கடவராகவும் இந்த புண்ணியத்துக்கு யாதாம்மொருத்தர் இசைகேடு 8. பண்ணினவன் கெங்கை கரையில் காராம்பசுவைக் கொன்ற பாவத்திலே போககடவாராகவும் இந்த கல்வெட் 9. டு எழுதினேன் மானாராய்யன் குப்பையன் எழுத்து இப்படிக்கு வானவீரன் மதுரையிலிருக்கும் சோ 10. லைய்யாப்பிள்ளை கெங்கையாடியர் எழுத்து விரையாச்சிலை ஊராயமைந்தவர் சொற்படிக்கு 11. கணக்கு சிதம்பரநாத பிச்சன் எழுத்து சுபமஸ்து உ”

  • Pudukkottai State incriptions (1928)