பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வெட்டுக்கள் 73 l இயல் 14 | திருமெய்யம் - -* மேலையூர் கல்வெட்டு இந்தக் கல்வெட்டும் திருமெய்யம் வட்டம் மேலையூரில் உள்ள லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயில் தென்புறச் சுவற்றில் காணப்படும் திருமலை ரெகுநாத சேதுபதியின் கல்வெட்டாகும். இவற்றின் காலம் 9.11.1662 இந்தக் கல்வெட்டில் இந்த தானத்தை வழங்கிய திருமலை ரெகுநாத சேதுபதி மன்னருக்குப் பூபாலன் என்ற அடைமொழி கொடுக்கப்பட்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. பூ மண்டலத்தைப் புறப்பவன்பூபாலன் என்று குறிக்கப்பட்டுள்ளது. (பரிபாலனம் செய்வதற்குப் பிறந்தவன்) என்பது இதன் பொருள். விண்ணகரம் என்பது பெருமாள் கோயில் கொண்டுள்ள வைணவ (விஷ்ணு கிரகம்) கோயில்களைச் சுட்டும் பொதுப்பெயராகும். தமிழ்மொழி ஆக்கம் கிரகம் என்றச் சொல்லின் விண்ணகரம் என்பது சொல்லாகும்.