பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சம் நிறைந்த நன்றி இந்தச் சிறிய நூலினைச் சிறப்பாக வரைந்து முடிப்பதற்கு எனக்கு ஆக்கமும் ஊக்கமும் உவந்து அளித்த அன்பு உள்ளங்களை மறக்காமல் இருக்க முடியாது. காலத்தால் செய்த நன்றியைத் தினையளவாக இருந்தாலும் பனையளவாகக் கொள்ள வேண்டும் என்ற வள்ளுவத்தின் வழி நின்று அந்த அன்பு உள்ளங்களை நெஞ்சார நினைந்து எனது பணிவான நன்றியினை இங்கு புலப்படுத்திக் கொள்கின்றேன். இவர்களில் எனது இந்தத் தொகுப்பிற்கு பல்லாற்றானும் துணை புரிந்த கரூர் ரீ இராமகிருஷ்ண ஆசிரமத் தலைவர் மகராஜ் ஆத்மானந்த சுவாமிகள் அவர்களுக்கும், இந்த நூலில் காணப்பெறும் கல்வெட்டுக்களில் புதிதாக கண்டுபிடித்தவற்றை எனக்கு தந்து உதவியதுடன் அனைத்து கல்வெட்டுக்களின் படிகளைப் பரிசீலித்துத் திருத்தம் செய்து கொடுத்த பெருந்தகை தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகக் கல்வெட்டுத் துறை தலைவர் டாக்டர்.செ.இராசு அவர்களுக்கும், இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ள புதுக்கோட்டை கல்வெட்டுக்களின் திருத்தமான படிகளைத் தந்து உதவிய டாக்டர் ஜெ. இராஜா முகமது அவர்களுக்கும் தேவகோட்டைவட்டகல்வெட்டுக்களை நேரில் சென்று பார்வையிட்டுத் திருத்தமான படிகளைத் தந்து உதவிய காரைக்குடி இராமசாமி தமிழ்க் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் டாக்டர் வள்ளி சொக்கலிங்கம் மற்றும் மேலப்பனையூர் கல்வெட்டு ஆய்வாளர் திரு.கரு.இராஜேந்திரன் அவர்களுக்கும் என்னால் என்றும் நினைவில் கொள்ளத் தக்கவர்கள். அவர்களுக்கு எனது நன்றியை உரித்தாக்குகின்றேன். = மேலும் இந்த நூலின் தட்டச்சுப் படிகளையும், அச்சுப் பிரதிகளையும், பார்வையிட்டு உதவிய இராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக்கல்லூரி தமிழ்த் துறை தலைவர் பேரா. மை. அப்துல் சலாம் அவர்களது பணியினுக்கும் எனது நன்றி. ஆசிரியர் Dr. S.M. slonso VI